இட ஒதுக்கீடு: கர்நாடகம், ஆந்திர, மகாராஷ்டிராவில் ஆதரவு திரட்டும் ராமதாஸ்
சென்னை:
பிற்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி படிப்புகளில் 27 சதவீத ஒதுக்கீட்டைஉடனடியாக அமல்படுத்தக் கோரி பாமக மாணவர் சங்கம் சார்பில் 25ம் தேதி மாவட்டஅளவில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்
இதுதொடர்பாக மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இதுவரை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்விநிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இல்லை. மண்டல் குழுபரிந்துரையின்படி மத்திய அரசில் வேலை வாய்ப்பில் மட்டும் இதர பிற்பட்டவகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.
படிக்காமல் எப்படி வேலைக்குச் செல்ல முடியும்?
இதை உணர்ந்துதான் தற்போதைய மத்திய அரசு உயர் கல்வி படிப்புகளில் 27 சதவீதஇட ஒதுக்கீட்டை அமல்படுத்த முன் வந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு சாரார் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடுவழங்கக் கூடாது என்று கூறி டெல்லியில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமாணவர்களைத் தூண்டி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது கண்டனத்துக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரி சென்னையில் ஏற்கனவே பாமகமாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், டாக்டர் ராமதாஸ் இதுதொடர்பாக டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் அர்ஜூன் சிங், முன்னாள்பிரதமர் வி.பி.சிங், லாலு பிரசாத் யாதவ், லாயம் சிங் யாதவ், சரத்யாதவ், நதீஷ் குமார்,ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து வருகிற 23, 24, 25 ஆகிய தேதிகளில் கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரமாநிலங்களுக்கும் சென்று இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு கோரவுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக வருகிற 25ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகங்கள் முன்பும் பாமக மாணவர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீட்டைஆதரித்தும், எதிர்ப்பாளர்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றுகூறியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்-பாமக நன்றி:
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையஉறுப்பினர் பதவியைக் கொடுத்ததற்கு முதல்வர் கருணாநிதிக்கு பாமக நிறுவனர்ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணைய உறுப்பினர் பொறுப்புக்கு வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமசாமிநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மிகப் பிற்படுத்தப்பட்ட வன்னியசமுதாயத்தைச் சேர்ந்த எவரும் நீண்ட காலமாக டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராகநியமிக்கப்பட்டதில்லை.
இந்தக் குறை வன்னிய சமுதாய மக்களின் மனதில் நீங்காமல் இருந்து வந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 7 பேர்நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. இதைக் கண்டித்துபாமக சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந் நிலையில் திமுக ஆட்சியில் தற்போது வன்னியருக்கு பிரதிநிதித்துவம்தரப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications