போப் கருத்துக்கு பாஜக, உமாபாரதி கண்டனம்
சென்னை:
இந்தியாவின் சில மாநிலங்களில் மதமாற்றத்திற்குத் தடை விதிக்கப்படுவதாக போப்ஆண்டவர் கூறியுள்ளதற்கு பாஜக மற்றும் உமாபாரதி ஆகியோர் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் விடுத்துள்ளஅறிக்கையில்,கிறிஸ்துவ மதம் வெளிநாட்டில் தோன்றி இந்தியாவுக்கு வந்தது என்பது உண்மை. நம்நாட்டு கிறிஸ்தவர்கள் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வந்தவர்கள் அல்ல (விதிவிலக்கான சிலரைத் தவிர).
இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்குப் பெருகியதற்குமதமாற்றமே முக்கிய காரணம். இந்தியாவில் முதல் கிறிஸ்தவர்கள் எப்படி மதம்மாற்றப்பட்டார்கள் என்பதை எத்தனையோ வரலாற்று ஏடுகள் விவரிக்கின்றன.
அதன் பிறகு கிறிஸ்துவ மதத்தின் எண்ணிக்கை, ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்பபெருகியது, அத்தோடு மதமாற்றமும் தொடர்ந்தது.
மதமாற்றம் என்பது வெறும் வழிபாட்டு மாற்றமாக இல்லாமல், பெயர் மாற்றம்,பழக்க வழக்கங்களில் மாற்றம் என்று தொடங்கி தெருப் பெயர் மாற்றம், ஊர் மாற்றம்என விஸ்தரிக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம் என பெயர்மாற்றம் செய்ய நடந்த முயற்சியினை நாம் மறந்து விட முடியாது.
வட கிழக்கு எல்லை மாகானங்களில் மத மாற்றத்தின் காரணமாக மதம் மாறியவர்கள்எண்ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை பெற்ற பிறகு தேசத்தை விட்டு பிரிந்துபோக வேண்டும் என்கிற பிரிவினைவாதம் ஓங்கியிருப்பதையும், அதற்கு கிறிஸ்துவமதத் தலைவர்கள் உறுதுணையாக இருப்பதும் மறக்க முடியாது.
மதமாற்றம் உண்மையான மன மாற்றத்தின் காரணமாகவா நடைபெறுகிறது? ஆசைவார்த்தை காட்டியும், அச்சுறுத்தியும் நடைபெறுகிறது. தீராத நோய்களைத் தீர்ப்பதாகநடைபெறும் பிரசாரம் தொடங்கி அறியாமையை பயன்படுத்தி நடைபெறும்மதமாற்றமே அதிகம்.
தனது கல்வி நிலையத்தில் இடம்பெற வேலை வாய்ப்புப் பெற மதம் மாறினால்மட்டுமே வாய்ப்பு என அச்சுறுத்தும் சம்பவங்கள் அதிகம்.
இதன் காரணமாகவே பரந்த மனப்பான்மைக்குப் பெயர் பெற்ற இந்து சமுதாயம்வெகுண்டு எழுந்து தன்னைக் காத்துக் கொள்ள மத மாற்றத் தடைச் சட்டம் கோருகிறது.
உலகம் முழுவதையும் மதம் மாற்றி தன் கொடையின் கீழ் கொண்டு வரத் துடிக்கும்போப், மத மாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்துப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆசை வார்த்தை காட்டியும், அச்சுறுத்தியும் செய்யப்படும் மதமாற்றத்தைத் தடுக்கஉள்ள சட்டம் இவர்களை எப்படி பாதிக்கும்? பாதிக்கும் என்று இவர்கள் அஞ்சுவதுஇந்த முறையில்தான் மதம் மாற்றுகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வதாக ஆகிறது.இத்தகைய மதமாற்றங்களும், போப் போன்றவர்களது இத்தகைய பேச்சும்சமுதாயத்தில் பதட்ட நிலையை உருவாக்கும்.
கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த பலர் இத்தகைய பிரசாரத்தையும், மதமாற்றத்தையும்விரும்பவில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனாலும் சோனியா காந்தியின்வழிகாட்டுதலின்படி மத்திய அரசு நடப்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்என்று கூறியுள்ளார் இல.கணேசன்.
உமா பாரதி:
யாத்திரைப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதீய ஜன சக்தி தலைவர் உமா பாரதிகாஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதச்சார்பின்மை குறித்து போப் ஆண்டவர் நமக்கு சொல்லி கொடுக்க வேண்டியஅவசியம் இல்லை. இந்தியாவப் பொருத்தவரை அனைத்து சமயப் பிரிவுகளுக்கும்உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது.
போப் ஆண்டவர் கூறியிருப்பது அவரது உள் மனதில் இருப்பதை வெளியே கொண்டுவந்துள்ளது. இந்து மதத்தைப் பொருத்தவரை இந்து மதத்தில் இருப்பவர்கள் மற்ற மதநூல்களைப் படித்தாலும் இந்துவாக இருக்கலாம்.
ஆனால் மற்ற மதங்களில் அப்படி இருக்க முடியாது. நமது நாட்டில் மதமாற்றம் என்றசதித் திட்டம் நடந்து கொண்டிருப்பதை போப்பின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. இந்தநாட்டை மதமாற்றத்தின் மூலம் கிறிஸ்துவ நாடாக ஆக்க அவர் முயற்சி செய்கிறார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக செயல்படலாம் என தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம், மதமாற்றத்தை ஓரளவேனும் தடுத்து நிறுத்தும் என நம்பலாம்.மதமாற்ற நிகழ்வுகளுக்கு அது ஒரு தடைக்கல்லாக அமையும் என்றார் உமாபாரதி.
முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று உமாபாரதிவழிபட்டார். சங்கர மடத்திற்குச் சென்று மறைந்த காஞ்சிப் பெரியவரின் சமாதியிலும்வணங்கினார்.












Click it and Unblock the Notifications