அதிமுக, மதிமுக, வி.சிறுத்தைகள் வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை அதிமுக புறக்கணித்தது. அக் கட்சி எம்எல்ஏக்கள்வெளிநடப்பு செய்துவிட்டனர்.
சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.உரையாற்றுவதற்காக அவைக்கு வந்த ஆளுநர் பர்னாலாவை சபாநாயகர்ஆவுடையப்பன் வரவேற்று அழைத்து வந்தார்.இதையடுத்து உரையை ஆளுநர் வாசிக்கத் தொடங்கினார். அவர் உரையைப் படிக்கத்தொடங்கிய மறு வினாடியே எழுந்த அதிமுக சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவர்செங்கோட்டையன்,
இந்த அரசு ஏராளமான வாக்குறுதிகளைத் தந்தது. ஆனால், எதுவும் முறைப்படிசெயல்படுத்தப்படவில்லை. மக்களை ஏமாற்றிவிட்டு ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
சமீபகாலமாக ரெளடிகள் தலை தூக்கிவிட்டார்கள். மதிமுக பொதுச் செயலாளர்வைகோவுக்கு பாதுகாப்பு இல்லை. இதையெல்லாம் கண்டித்து வெளிநடப்புசெய்கிறோம் என்றார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கைக்குஅருகே சபையின் மையப் பகுதியில் கூடி நின்று திமுக அரசுக்கு எதிராககோஷமிட்டனர். பதிலுக்கு குரல் எழுப்ப எழுந்த திமுகவினரை முதல்வர் கருணாநிதி,அமைச்சர்கள் கண் பார்வையாலேயே அமர வைத்தனர்.
இதையடுத்து அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏக்கள் வெளிநடப்புசெய்தனர்.
வெளிநடப்பு செய்த அவர்கள் சட்டமன்ற வளாகத்தில் கூடி நின்று ஆர்பாட்டம்நடத்தினர். அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
15 நிமிடம் வரை கோஷமிட்டபடி இருந்த அவர்களை அவைக் காவலர்களோ,போலீசாரோ ஒன்றும் செய்யவில்லை. சும்மா அமைதியாக பார்த்தபடி நின்றனர்.
இதையடுத்து எம்எல்ஏக்கள் அவர்களாகவே கலைந்து சென்றுவிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது நிருபர்களிடம் பேசிய செங்கோட்டையன்,
கூட்டுறவு கடனை முழுமையாக ரத்து செய்யவில்லை. சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு கடன் ரத்து என்றார்கள். ஏதும் செய்யவில்லை.
ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்றார்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணஉதவியாக ரூ. 15,000 தருவோம் என்றார்கள். எதையும் தரவில்லை.(செங்கோட்டையன் இவ்வாறு வெளியில் பேசிக் கொண்டிருந்தபோது இந்தஅறிவிப்புகளை எல்லாம் ஆளுநர் தனது உரையில் அறிவித்துக் கொண்டிருந்தார்)
தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையுமே இந்த அரசு செய்யவில்லை. புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட இசட் பாதுகாப்பை ரத்துசெய்துவிட்டார்கள். அவருக்கு பாதுகாப்பே இல்லை.
வைகோவுக்கும் பாதுகாப்பில்லை. அதிமுக தொண்டர்களும் தாக்கப்படுகிறார்கள்.இது குறித்து புகார் தந்தால், புகார் தந்தவர்கள் மீதே வழக்கு போட்டு கோர்ட்டுக்குஅலைய விடுகிறார்கள்.
இதனால் தான் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
ஆளுநர் உரையின்போது இடைமறித்துப் பேசுவது, வெளிநடப்பை தலைமை தாங்கிநடத்துவது, ஆர்பாட்டத்தை நடத்துவது, நிருபர்களிடம் பேசுவது என சட்டமன்றஅதிமுக கட்சித் தலைவரான ஓ.பன்னீர்செல்வம் செய்ய வேண்டிய வேலைகளைஎல்லாம் இன்று செங்கோட்டையன் செய்து கொண்டிருந்தார்.
ஓ.பி, சும்மா கூட்டத்தோடு நின்று கொண்டு தனது 5 வருட சட்டமன்ற அனுபவத்தைவெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.
முன்னதாக இன்று அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்துஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்,கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் மூத்த தலைவர்களுடன் நேற்று இரவுஆலோசனை நடத்தினார்.
அதில், ஆளுநர் உரையைப் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
அதிமுகவுக்கு பாமக கண்டனம்:
இந் நிலையில் ஆளுநர் உரைக்குப் பின்னர் வெளியே வந்த பாமக தலைவர் மணிசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டசபையில் ஆளுநர் உரை நிகழ்த்துவதற்கு முன்பாகவே அதிமுகவினர்வெளிநடப்புச் செய்தனர். இது சரியான செயல் அல்ல. ஆளுநர் உரையில் என்னசொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்குள்ளாகவே அவர்கள் வெளிநடப்புச்செய்துவிட்டு, அரசு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்றுகூறியுள்ளனர்.
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான பல நடவடிக்கைகள் இந்த ஆளுநர்உரையில் உள்ளன. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அறிக்கையாக உள்ளது.
நாங்களே ஆச்சரியப்படக் கூடிய அளவுக்கு இதில் பல அறிவிப்புகள் உள்ளன.கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றக்கூடிய வகையில் ஆளுநர் உரை அமைந்துள்ளது என்றார் மணி.
ஜெவுக்கு பாதுகாப்பு: சபாநாயகர்
இதையடுத்து நிருபர்களிடம் சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில்,
பட்ஜெட் கூட்டம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. அவையை சுமூகமாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறீேம். மக்கள் கோரிக்கைகளைசட்டசபையில் எடுத்துச் சொல்ல வேண்டம். அரசு மூலம் மக்களுக்கு வேண்டியதை வாங்கித் தர வேண்டும் என்பதற்காகத் தான் உறுப்பினர்களை மக்கள்தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றார்.
ஜெயலலிதா அவைக்கு வர மாட்டேன் என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, எல்லோரும் அவைக்கு வர வேண்டும். அதற்காகத் தானேமக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ார்கள் என்றார்.
தனக்கு பாகாப்பில்லை என ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே? அவர் வந்தால் உரிய பாதுகாப்பு தரப்படுமா என்று கேட்டதற்கு, நிச்சயமாகபாதுகாப்பு வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications