இலங்கை: கருணாநிதி தலையிட கோரிக்கை
சென்னை :
இலங்கை பிரச்சினையில் தமிழக முதல்வர் கருணாநிதி நேரடியாக தலையிட்டுஅமைதித் தீர்வு ஏற்பட முயற்சிக்க வேண்டும் என்று இலங்கை தமிழர் ஐக்கியவிடுதலை முன்னணிக் கட்சியின் தலைவர் அனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதிக்கு அனந்தசங்கரி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,தாங்கள் முதலில் இலங்கைக்கு வர வேண்டும். இங்கு வந்து தமிழர் மற்றும் சிங்களசமுகத் தலைவர்களை சந்திக்க வேண்டும். இலங்கைப் பிரச்சினை தொடர்பாகதேவைப்பட்டால் பிரதமரை சந்திப்பேன் என்று தாங்கள் சமீபத்தில் கூறினார்கள்.
தாங்கள் தலையிட வேண்டிய நேரம் வந்து விட்டது. இப்போதுதான் நீங்கள்இப்பிரச்சினையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களைப் போல இப்போதும் உங்களது தலையீட்டை இலங்கையில் உள்ளசிங்கள மக்கள் வரவேற்பார்கள். தமிழர்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.அனைவரும் சேர்ந்து அமைதியான வாழ்வு வாழ வேண்டும் என்பதே இலங்கையில்உள்ள அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இலங்கை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஆளுங்கட்சியானசுதந்திராக் கட்சியும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும், கூட்டாட்சி தீர்வுக்குசம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை தவற விட்டு விடக் கூடாது என தமிழர்கள்விரும்புகிறார்கள். இந்த தீர்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பார்கள். இந்தியாவில் இருப்பதைப் போன்றஅரசியல் சட்டத்தை இலங்கையிலும் கொண்டு வர வேண்டும் என்று நான் இலங்கைஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
எனது இந்த கோரிக்கைக்கு இலங்கையில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது என்றுகூறியுள்ளார் அனந்தசங்கரி.
இன்றும் 120 அகதிகள் வருகை:
இந் நிலையில் இன்றும் திரிகோணமலையைச் சேர்ந்த 32 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அதிகாலையில் 6 படகுககளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாகவந்து சேர்ந்தனர். இதில் 37 பேர் பெண்கள், 21 பேர் குழந்தைகள்.
நேரடி பேச்சு: புலிகள் நிராகரிப்பு:
இதற்கிடையே புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனை புத்த, கிருஸ்துவ மதத் தலைவர்கள், போதகர்கள் சந்தித்து இலங்கை அதிபர்ராஜபக்ஷேவுடன் புலிகள் நேரடியாகப் பேச்சு நடத்த வேண்டும் என்று கோரினர்.
சில நாட்களுக்கு முன் தாங்கள் ராஜபக்ஷேவை சந்தித்தபோது புலிகள் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேசத் தயாராக இருப்பதாக அவர்தெரிவித்ததாக மதத் தலைவர்கள் கூறினர்.
போர் நிறுத்த உடன்பாட்டை இலங்கை ராணுவம் மீறி வருவதையும், இதனால் தமிழர்கள் அடைந்து வரும் பாதிப்புகளையும் விளக்கிய தமிழ்ச்செல்வன்,இலங்கை அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று கூறிவிட்டார்.
நார்வேயைத் தவிர்த்துவிட்டு பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லை எனவும் தமிழ்ச் செல்வன் கூறினார்.
மட்டகளப்பில் குண்டு காயத்துடன் தமிழர் உடல்:
இதற்கிடையே மட்டக்களப்பில் பாதி அழுகிய நிலையில் குண்டுக் காயங்களுடன் மகாலிங்கம் விஜய்குமார் என்வரின் உடல் கிடந்தது. இவர் தமிழகத்தைச்சேர்ந்த துணி வியாபாரியாவார். கடந்த 18ம் தேதி முதல் இவர் காணாமல் போனார். இந் நிலையில் வளைச்சேனை பகுதியில் அவரது உடல் கிடந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications