இன்னும் அரசு இல்லங்களில் குடிபுகாத மந்திரிகள்
சென்னை:
சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் அமைச்சர்கள் யாரும் இன்னும் அரசுஒதுக்கியுள்ள இல்லங்களுக்கு குடிபோகாமல் உள்ளனர்.
அரசு பங்களாக்கள் பலவும் அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப புதுப்பிக்கப்பட்டுவருவதால் அரசு விருந்தினர் இல்லங்களில்தான் அமைச்சர்களும், சபாநாயகரும்இன்னும் தங்கியுள்ளனர்.சபாநாயகர், அமைச்சர்களுக்கு அரசு சார்பில் பங்களாக்கள் ஒதுக்கப்படும். சென்னைராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் இந்த இல்லங்கள் அமைந்துள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த இல்லங்களில் தங்கியிருந்த அதிமுகஅமைச்சர்கள் அனைவரும் காலி செய்து விட்டனர். இன்னும் 6 பேர் மட்டுமே அங்குதங்கியுள்ளனர். அவர்கள் சென்னையில் தங்குவதற்காக வாடகை வீட்டைப் பார்த்துவருவதாக கூறப்படுகிறது.
காலி செய்யப்பட்ட பங்களாக்களை அழகுபடுத்தும் வேலைகள் தொடங்கியுள்ளன.அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களைப் பார்த்து அந்த மாற்றம்,இந்த மாற்றம் என ஏகப்பட்ட மாற்றங்களைக் கூறியுள்ளனர். அதன்படி அந்தபங்களாக்கள் மாற்றம் கண்டு வருகின்றன.
இப்பணிகள் காரணமாக திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களைஎட்டியும் கூட ஒரு அமைச்சர் கூட இன்னும் அரசு பங்களாவுக்கு குடிபோகாமல்உள்ளனர்.
சில பங்களாக்களில் தரைத் தளம்முழுமையாக பெயர்க்கப்பட்டு வேறு தளம்போடப்பட்டு வருகிறது. கதவுகள், ஜன்னல்களும் மாற்றப்பட்டு வருகின்றன.
சில பங்களாக்களில் வாஸ்துப்படியும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகஅதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் இப்பணிகள் முடிந்து அமைச்சர்களிடம்பங்களாக்கள் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த அதிமுக அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.இதில் முதல்வர் ஜெயலலிதா, ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களதுசொந்த வீடுகளிலேயே தங்கிக் கொண்டனர்.
இதனால் பங்களாத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் தற்போது திமுகஅமைச்சரவையில் அதிக அளவில் அமைச்சர்கள் இருப்பதால் பங்களாக்களுக்குத்தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம்,ஏ.வ. வேலு உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களது சொந்த பங்களாக்களிலேயேதங்கிக் கொள்ளப் போவதாக கூறி விட்டதால் பங்களாவுக்குத் தட்டுப்பாடுஏற்படவில்லையாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications