மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்பட்டவர்களுக்கு27% இட ஒதுக்கீடு: அடுத்த ஆண்டு முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நாட்டின் அனைத்து உயர் கல்வி மையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்குக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டைஅமல்படுத்துவது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அடுத்த கல்வியாண்டான, 2007ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சில வட மாநிலங்களில் சில நகர்களில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளமருத்துவமனைகள், ஐஐஎம், ஐஐடி ஆகியவற்றைச் சேர்ந்த ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதனால் இட ஒதுக்கீடு அமலாவதில் சிக்கல் எழுந்தது. ஆனால், இட ஒதுக்கீட்டை கட்டாயம் அமலாக்கியே தீரவேண்டும் என திமுக, பாமக, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்டகூட்டணிக் கட்சிகள் மத்திய அரசை நெருக்கின.

இதையடுத்து நேற்றிரவு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது.கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்த அக் கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார்.

அதில் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவது என்றும், போரட்டங்களுக்கு எல்லாம் வளையாமல்ஒதுக்கீட்டை 27 சதவீதம் அளவுக்கு அமலாக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இத் தகவலை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குப் பின் மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி, ப.சிதம்பம்ஆகியோர் நள்ளிரவில் பிரதமர் இல்லத்துக்கு வெளியே நிருபர்களிடம் அறிவித்தனர்.

இது தொடர்பான சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும். இதன்மூலம் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்.

மேலும் இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க உயர் மட்டக் குழு அமைக்கப்படும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டால் யாரும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உயர் கல்வி மையங்களில் மாணவர்சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம்நடத்தி வருவதால் நிலைமையை சமாளிக்க புதிய ஜூனியர் மருத்துவர்களையும் ஓய்வு பெற்றமருத்துவர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று முதல் நேர்முகத் தேர்வுகள் நடக்கின்றன. இந்தத் தேர்வுகள் நடக்கும் இடங்களுக்கு வெளியிலும்இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மருத்துவ மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இன்டர்வியூக்களுக்குச்செல்லாதீர்கள், எங்கள் முதுகில் குத்தாதீர்கள் என நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடம் இந்த மாணவர்கள்கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே சப்தர்ஜங் மருத்துவமனையில் நேர்முகத் தேர்வை நடத்த சில மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.இவர்களும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ஆவர். இதையடுத்து வேறு டாக்டர்களைக் கொண்டு நேர்முகத்தேர்வை நடத்த மத்திய நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாளை இந்த மருத்துவர்களும் மாணவர்களும் தேசிய அளவில் பந்த் நடத்தவும், சட்ட மறுப்புப் போராட்டம்நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

-சிறுபான்மையினருக்கு தனி இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்படும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+