அன்பரசு மகன் மீது பண மோசடி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை :

ராஜீவ் காந்தி பெயரில் அறக்கட்டளை தொடங்குவதாக கூறி ரூ. 35 லட்சம் பணத்தைமோசடி செய்து விட்டதாக முன்னாள் எம்.பி அன்பரசுவின் மகனும், சோளிங்கர்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான அருள் அன்பரசு மீது சென்னை நீதிமன்றத்தில்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பைனான்சியர் குல்சந்த் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் 8வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு, அவரது மனைவி கமலா, மகன்கள் அருள்அன்பரசு, அசோக் அன்பரசு ஆகியோர் என்னை அணுகி, கடன் கேட்டனர். ராஜீவ்காந்தி அறக்கட்டளையைத் தொடங்க இந்த கடனைக் கேட்டனர். நானும் ரூ. 35 லட்சம்ரூபாயை கடனாகக் கொடுத்தேன்.

இந்தப் பணத்தை அவர்கள் திருப்பித் தரவில்லை. அறக்கட்டளையையும்ஆரம்பிக்கவில்லை. இந் நிலையில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அருள்அன்பரசுக்கு டிக்கெட் கிடைத்தது. இதை எதிர்த்து நான் காங்கிரஸ் மேலிடத்திற்குகடிதம் அனுப்பினேன். இது பத்திரிகைகளிலும் செய்தியாக வெளியானது.

இதையடுத்து அன்பரசு தரப்பினர் என்னை அணுகி, பிரச்சினையை பெரிதுபடுத்தவேண்டும் என்று கூறி ரூ. 35லட்சம் பணத்துக்காக காசோலையைக் கொடுத்தனர்.இதை கடந்த 12.4.200 அன்று வங்கியில் போட்டபோது அருள் அன்பரசு கணக்கில்பணம் இல்லை என்று கூறி காசோலை திரும்பி விட்டது.

அந்த காசோலையில், அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மணி என்பவர்கையெழுத்திட்டுள்ளார்.

இந்த மோசடியில் அன்பரசு, அவரது மனைவி, மகன்கள் ஆகியோரும் உடந்தையாகஇருந்துள்ளனர். எனவே அனைவர் மீதும் காசோலை மோசடி சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் போத்ரா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+