அண்ணா பல்கலையில் நானோ டெக்னாலஜி படிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ. 5 கோடியில் எம்.டெக். நானோ டெக்னாலஜி உயர் படிப்பு அடுத்தஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவுகளில் இதுவும் ஒன்று. அவரது யோசனையின்பேரில் இந்தப் படிப்புதொடங்கப்படுகிறது. இதற்காக நவீன ஆய்வகங்களையும் கல்விக்கான அடிப்படை கட்டுமானத்தையும் அண்ணாபல்கலை உருவாக்கி வருகிறது.இது குறித்து பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில்,
இந்த உயர் கல்விக்காக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ரூ.5.68 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும்தமிழக அரசும் ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளது.
உலகத் தரத்தில் இந்தப் பாடத் திட்டம் அமையும். ஆண்டுதோறும் 15 மாணவ, மாணவிகள் மட்டுமே இந்த உயர்கல்வியில் சேர்க்கப்படுவார்கள். எம்எஸ்சி பிஸிக்ஸ், பிஇ எலெக்ட்ராக்ஸ், பிஇ மெட்டீரியல் சயின்ஸ், பிஇமெக்கனிக்கல் என்ஜினியரிங் போன்றவற்றை முடித்த பட்டதாரிகள் இதில் சேரலாம் என்றார்.












Click it and Unblock the Notifications