ஆட்சியில் பங்கு கேட்டு காங் போஸ்டர் போர்!
சென்னை:
திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு தர வேண்டும் என்று கோரி சென்னையின்சில பகுதிகளில் காங்கிரஸ் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜி.கே.வாசன்ஆதரவாளர்கள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளதால் பரபரப்பு அதிகமாகியுள்ளது.
தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் என மத்திய அமைச்சர் இளஙகோவன் தரப்பும்,யசோதா, தங்கபாலு, குமரிஅனந்தன் உள்ளிட்ட பல கோஷ்டிகளும் கோரிக்கைவிடுத்து வருகின்றன.
![]() |
இந் நிலையில் வாசன் கோஷ்டியும் குரல் தரத் தொடங்கியுள்ளது. ஒருவேளைஆட்சியில் பங்கு தர திமுக சம்மதித்துவிட்டால், குரல் கொடுக்காத நம்மை தலைமைஒதுக்கிவிடும் என்று பயம் வந்துவிட்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
இப்போதுள்ள 35 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 17 பேர் வாசனின் ஆட்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. இளங்கோவனின் ஆட்கள் 5 பேர்.
இந் நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன்உள்ளிட்ட சில இடங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் தமிழினத் தலைவரே, முதல்வரே, காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கொடுங்கள்,தமிழகமே உங்களை பாராட்டும் என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள்ஒட்டப்பட்டுள்ளன.மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களான முனவர் பாட்சா மற்றும்அசோக்குமார் ஆகியோரது பெயர்கள் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.
இந்த போஸ்டர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக வட்டாரத்தில் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
