என்னைத் தாக்க அதிமுக சதி: கருணாநிதி
சென்னை:
சட்டசபையில் என்னை தாக்க அதிமுகவினர் திட்டமிட்டு வந்திருப்பது போலத்தெரிகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பெரும் அமளியும், ரகளையும் ஏற்பட்டு அதிமுக உறுப்பினர்கள்அனைவரும் கூண்டோடு கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டனர். அதிமுகவினர்வெளியேற்றப்பட்ட பிறகு,மதிமுக தலைவர் .கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வம்ஆகியோர் எழுந்து, அதிமுகவினர் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, அதிமுகவினரால் மைக்கால்தாக்கப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள். கருப்பசாமி பாண்டியன்,கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மட்டும் தடுத்திருக்காவிட்டால்என்னையும் தாக்கியிருப்பார்கள். தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்தது போலதெரிகிறது.
எனவே அதிமுகவினர் மீதான நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்என்ற கோரிக்கையை யாரும் ஏற்க மாட்டார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்கள்வருத்தம் தெரிவித்தால் அவர்களை அவையில் மீண்டும் அனுமதிப்பது குறித்துஅலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யலாம் என்றார்.
அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், அலுவல் ஆய்வுக் குழு நாளை கூடிஇதுதொடர்பாக முடிவெடுக்கும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications