இலங்கை தமிழர்களை தாக்க பாக் உதவி-பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை அந்நாட்டு அரசே தேர்வு செய்துபாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து அவர்கள் மூலம் தமிழர்களைத் தாக்கி ஒழிக்கதிட்டமிட்டுள்ளதாக பாஜக தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் புது தகவலைவெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்து வரும் இந்துக்களைக் கொல்வதும், அடித்துவிரட்டுவதும் பயங்கரவாதிகளின் திட்டமாக உள்ளது. இவர்களை ஒடுக்க மத்தியஅரசுஉறுதி காட்டாமல் உள்ளது.

இதே நிலைதான் இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்பேசு இந்துக்கள். கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்ட ரீதியில் தமிழ் பேசும் இந்துக்கள்அந்த நாட்டிலிருந்து கொல்லப்படுவதும், அகதிகளாக அனுப்பப்படுவதும்தொடர்கிறது.

இதற்கு போர் ஒரு தீர்வாகாது என்பது உண்மை. ஆனால் பிரச்சினையைத் தீர்க்கஅரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் அமலாக்கப்படாமல் இருக்குமானால்விளைவு என்ன ஆகும்?

அங்கு வாழும் தமிழர்களுக்கு வாழ்வுரிமை உள்ளது என்பதை

சிங்களவர்களுக்கும், சிங்கள ஆதரவு அரசுக்கும் உணர்த்த வேண்டாமா?

இலங்கையில் இன்று இந்து ஆலயங்கள் அகற்றப்பட்டு, புத்தர் சிலைகள்நிறுவப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

சமீபத்திய தகவலின்படி இலங்கை அரசு இஸ்லாமிய இளைஞர்களைத் தேர்வு செய்துபாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்து ஜிஹாதிகளாக பயிற்சி பெற வைக்கிறது என்றும்அவர்கள் திரும்பி வந்து இந்து தமிழர்களைத் தாக்குவார்கள் என்றும் மதரீதியானபாகுபாடு ஏற்பட அரசே துணை போகிறது என்றும் குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன.

பக்கத்து நாடான நேபாளம் குறித்த நாம் அக்கறைப்படுவது தவறில்லை என்றால்இலங்கை விஷயத்திலும் இந்திய அரசு அக்கறை செலுத்துவதில் தவறில்லை என்றுகூறியுள்ளார் கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+