ராமர் பிள்ளை மீது மனைவி போலீஸில் புகார்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூர்:

Ramar Pillai
மூலிகை பெட்ரோல் பிராட் ராமர் பிள்ளை தன்னையும், குடும்பத்தையும்கவனிப்பதிலலை என்று கூறி அவரது மனைவி ஜெயந்தி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு ன்பு மூலிகை பெட்ரோலை கண்டு பிடித்துள்ளதாக கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியவர் ராமர் பெட்ரோல். ஆனால், மூலிகை என்ற பெயரில்பெட்ரோலையே கலப்படம் செய்து அவர் விற்றது தெரிய வந்தது.

ஆனால், தனது விஞ்ஞான கண்டுபிடிப்பை விரும்பாதவர்கள்தான் இதுபோலபொய்யான புரளிகளை கிளப்பி விடுவதாக ராமர் குற்றம் சாட்டினார். பின்னர்பாஜகவிலும் அவர் சேர்ந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராமர் பிள்ளை தற்போதுசென்னையில் வசித்து வருகிறார். இந் நிலையில் ராமர் பிள்ளை மீது அவரது மனைவிஜெயந்தி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில்,

எனது கணவர் ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து சாதனைபடைத்தவர். அவர் தற்போது என்னுடன் வசிக்கவில்லை. பூங்கனி என்ற பெண்ணுடன்சேர்ந்து சென்னையில் வசித்து வருகிறார்.

எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். எங்களுக்கு ராமர் பிள்ளை பணம்கொடுப்பதில்லை. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.செலவுகளுக்கு அக்கம் பக்கத்தில் வாங்கி சமாளித்து வருகிறோம்.

கடன் அதிகமாகி விட்டதால் அதைக் கட்ட முடியவில்லை. இதனால் எனது வீட்டைகடன்காரர்கள் எழுதி வாங்கிக் கொண்டு விட்டனர். இப்போது கடனும் வாங்கமுடியாமல் அவதிப்படுகிறேன்.

எனவே எனது கணவரை பூங்கனி மற்றும் அவரது தந்தை ராமையாஆகியோரிடமிருந்து மீட்டு என்னிடம் சேர்ந்து வசிக்க உத்தரவிட வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயந்தி.

இந்தப் புகாரை வாங்கிக் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் காவல் நிலையகாவல்துறை அதிகாரிகள், ராமர் பிள்ளையை விசாரணைக்கு வருமாறுஅழைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+