என்னை பார்த்து சிரிக்கிறார்கள்: ஜெ புகார்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகள் தங்களது மாமன், மச்சானிடம் வாங்கிய கடனையெல்லாம் நாங்கள்தள்ளுபடி செய்ய முடியாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கிண்டலாகதெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டசபைக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்ட ஜெயலலிதா கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஜெயலலிதாவின் பேட்டி:

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. ஆனால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை மட்டுமேதள்ளுபடி செய்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அப்படியானால் தேசிய வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகளின் கதி என்ன?அவர்களுடைய கடனை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என்று நான் கேட்டேன்.

அதற்குப் பதில் அளித்த நிதி அமைச்சர் அன்பழகன், கூட்டுறவு வங்கிகளில்விவசாயிகள் வாங்கிய கடனை மட்டுமே தள்ளுபடி செய்வோம் என்றுதான் நாங்கள்தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். மற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யமுடியாது என்றார்.

கூட்டுறவு வங்கிககளில் விவசாயிகள் வங்கிய ரூ. 7,000 கோடி அளவிலான கடனைதள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். தேசிய வங்கிகளிலும் வாங்கியுள்ளகடனைச் சேர்த்தால் மொத்தம் ரூ. 16,000 கோடி தேவைப்படும்.

இந்தக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அவர்கள் விவசாயிகள் இல்லையாஎன்று நான் கேட்டால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.

விவசாயிகளை கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள், தேசியவங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் என பாகுபாடு பார்த்து பிரித்து விட்டதுஇந்த அரசு. இதை சுட்டிக் காட்டி நான் கேள்வி கேட்டால், நிதி அமைச்சர் அன்பழகன்எழுந்து, விவசாயிகள் தங்களது மாமன், மச்சானிடம் வாங்கிய கடனை எல்லாம்எங்களால் ரத்து செய்ய முடியாது என்று கிண்டலாக கூறுகிறார். ஒரு நிதி அமைச்சர்கூறும் பதிலா இது?

சரி, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறீர்கள்.அப்படியானால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தியவிவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். அவர்கள் கட்டிய பணத்தைஅவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம் என்று நான்கூறினால் மறுபடியும் திமுகவினர் சிரிக்கிறார்கள்.

விவசாயிகள் குறித்து நான் பேசும்போதெல்லாம் அவர்கள் சிரிக்கிறார்கள்.விவசாயிகளை அந்த அளவுக்குத்தான் அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

விவசாயிகள் குறித்து நான் கேட்ட ஒரு கேள்விக்கும் முதல்வரோ, நிதி அமைச்சரோ,விவசாய அமைச்சரோ சரியான பதிலைத் தரவில்லை. பதில் அளிக்க முடியாமல்திணறினார்கள்.

விவசாயிகளுக்குப் புதிதாக ரூ. 1,000 கோடி கடன் தரப் போவதாக திமுக அரசுஅறிவித்துள்ளது. ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்றுஅறிவித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு அந்தக் கடனை இப்போதே கொடுக்கவேண்டும்.

அந்தக் கடனை எப்படி வழங்கப் போகிறார்கள் என்ற விவரத்தை வெளியிடவேண்டும் என்று நான் கேட்டதற்கும் சரியான பதிலை அமைச்சர்கள் தரவில்லை.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தரப் போவதாக அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் 86 லட்சம் ஏழை விவசாயிகள் உள்ளனர். இவர்களுக்கு தலா 2 ஏக்கர்நிலம் தர வேண்டும் என்றால் 1.72 கோடி ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால்தமிழகத்தில் இருப்பதோ மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசு நிலம்தான் உள்ளது.

அப்புறம் எப்படி 1.72 கோடி ஏக்கர் நிலத்தை தர முடியும் என்று நான் கேட்டகேள்விக்கும் முதல்வரிடமிருந்து சரியான பதில் இல்லை. மாறாக ஆளுங்கட்சியினர்மீண்டும் சிரிக்கிறார்கள். கணக்கு தப்பாக போடுகிறேன் என்று கூறுகிறார்கள். எப்படிகணக்கு தப்பாக போகும்?

86 லட்சம் பேர், தலா 2 ஏக்கர் நிலம் என்றால் 1.72 கோடி ஏக்கர்தானே கணக்குவருகிறது, இதில் தப்பு எங்கே இருக்கிறது?

இப்படி நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் முதல்வராலும், அமைச்சர்களாலும் சரியானபதிலைத் தர முடியவில்லை.

இன்றைய தினம் என்னைத் தவிர அதிமுகவைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அவையில்கலந்து கொள்ள முடியவில்லை.

எனவே அதிமுகவுக்கு ஒதுக்கப்படும் நேரத்தை எனக்கு அளித்து பேச வாய்ப்பளிக்கவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரினேன். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார்.அரை மணி நேரம்தான் தரமுடியும், பேசுவதென்றால் இப்போதே பேசுங்கள் என்றுகூறி விட்டார்.

எனக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் விதிமுறைப்படி உரிய வாய்ப்புவழங்கப்பட்டால் நானும் தொடர்ந்த கூட்டங்களில் கலந்து கொள்வேன் என்றார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+