இட ஒதுக்கீடுக்கு ஐஐடி மாணவர் கட்சி எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை :

இட ஒதுக்கீட்டால் ஜாதீயப் பிளவுகளை ஏற்படும் என்றும் இதனால் இடஒதுக்கீடுகளை அறவே நீக்க வேண்டும் என்று ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்களின்கட்சியான லோக் பரித்ரன் கூறியுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் தெடங்கப்பட்டது லோக் பரித்ரன் என்ற கட்சி.முன்னாள் ஐஐடி மாணவர்கள், உயர் வேலைகளில் இருந்தவர்களால்ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்பதால் லோக் பரித்ரனுக்கு மக்களிடையே எதிர்பார்ப்புஏற்பட்டது.

தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் ஏழரை லட்சம்ஓட்டுக்களுளுக்கு மேல் வாங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

ஆனால் கட்சித் தலைவர் தன்மய் ராஜ்புரோஹித் ஜாதி வெறியராக இருக்கிறார், உயர்ஜாதியினரை மட்டுமே அவர் மதிக்கிறார், மற்ற ஜாதியினரை ஒதுக்க முயற்சிகள்நடக்கின்றன என்று கூறி சென்னை நகரின் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டபிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த இக்கட்சி வேட்பாளர்கள் கட்சியிலிருந்துவிலகினர்.

இந் நிலையில் சென்னை வந்த ராஜ் புரோஹித் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இட ஒதுக்கீடு என்பது ஜாதிய பிரிவை ஏற்படுத்தவே உதவுகிறது. இதன் உண்மையானநோக்கமான சமூகத்தில் மிகவும் பிற்பட்ட நிலையில் இருப்பவர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள், நலிவடைந்தவர்களுக்கு உரிய பலனை இந்த இட ஒதுக்கீடுகள்தரவில்லை.

ஓட்டு வங்கிக்காகவும், அரசியல் செய்வதற்காகவும் தான் இந்த இட ஒதுக்கீடுகளைஅரசுகள் அறிவிக்கின்றன. ஜாதிகளிடையே சில ஜாதிகளை மேல் ஜாதி என்றுஅடையாளம் காட்டவே இந்த இட ஒதுக்கீடுகள் உதவுகின்றன.

எனவே இட ஒதுக்கீடு என்பதே தேவையற்றது என்றார் புரோஹித்.

ரொம்ப சுத்தம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+