உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி ராமானுஜம்-நடராஜன் உள்பட 40 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழக உளவுப் பிரிவு போலீஸ் கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த ராமானுஜம்உள்ளிட்ட 40 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை கமிஷ்னராக இருந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசி தேர்தல்ஆணையத்தால் கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்ட நடராஜன் தமிழ்நாடுமின்வாரிய விஜிலன்ஸ் அதிகாரி என்ற உப்புசப்பில்லாத பதவிக்கு தூக்கிஅடிக்கப்பட்டுள்ளார்.உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்து வந்த ராமானுஜம் போலீஸ் பயிற்சி கூடுதல்டிஜிபி ஆக மாற்றப்பட்டுள்ளார். இவரும் சிவனாண்டியும் சேர்ந்து தான் கூட்டணிக்கட்சிகளை உடைப்பது உள்ளிட்ட வேலைகளைப் பார்த்ததாக திமுக குற்றம் சாட்டியதுநினைவுகூறத்தக்கது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் கூடுதல் டிஜிபியாக விபாகர் சர்மாகநியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஜி அர்ச்சனா ராமசுந்தரம் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை குற்றவழக்குகள் துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல ஐஜி சரப்ஜித் சிங் பதவி உயர்த்தப்பட்டு சென்னை நலப் பிரிவு கூடுதல்டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிபிஜியாக நரேந்திர பால் சிங், சென்னை ஆயுதப்படை ஐஜியாக ஜே.தே.திரிபாதி, சென்னை செயலாக்கப் பிரிவு ஐஜியாக தமிழ்ச்செல்வன், சென்னை போக்குவரத்து இணை ஆணையராக சுனில்குமார்,
தொழில்நுட்பப் பிரிவு டிஐஜியாக விஜயக்குமார், சேலம் டிஐஜியாக சந்தீப் ராய்ரத்தோர் (சிவனாண்டிக்கு சீனியாரிட்டி கொடுத்ததை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வழக்குதொடர்ந்தவர்களில் ஒருவர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் டிஐஜியாக அபய் குமார் சிங், திண்டுக்கல் டிஐஜியாகவன்னியபெருமாள், சென்னை பயிற்சி டிஐஜியாக அலெக்சாண்டர் மோகன், தென்சென்னை இணை ஆணையராக துரைராஜ், ரயில்வே டிஐஜியாக கருணாசாகர்,
நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக சுனில்குமார் சிங், மதுரை சரக டிஐஜியாகசெண்பகராமன், சிபிசிஐடி பிரிவு விசேஷ புலனாய்வுப் பிரிவு டிஐஜியாக உமாகணபதிசாஸ்திரி,
மத்திய சென்னை இணை ஆணையராக சீமா அகர்வால் ஆகியோர்மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகர காவல்துறை ஆணையராக கோபாலகிருஷ்ணன், திருவள்ளூர்எஸ்.பியாக ராஜேந்திரன்,
ஆவின் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக தாமரைக்கண்ணன், சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக பாரி, மதுரை போக்குவரத்து துணை ஆணையராகசமுத்திரப்பாண்டி,
தூத்துக்குடி போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வராக சண்முக ராஜேஸ்வரன், சென்னைநிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாக சேஷசாயி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு வேண்டிய பொன். மாணிக்கவேல் மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பிஎன்ற டப்பா போஸ்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications