அதிமுகவினரை கட்டுப்படுத்தாத ஓ.பி!
சென்னை:
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் கடுமையாக மோதலில் ஈடுபட்டஅதிமுக எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம்.
சட்டசபையில் நேற்று அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கை கலப்பு நடந்தது.மைக்குகள் உடைத்து வீசப்பட்டன.கலைராஜன் உள்ளிட்ட பல அதிமுக உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன்மோதிக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், சபாநாயகர்ஆவுடையப்பனிடம் நேருக்கு நேராக கடுமையாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம் சேகர்பாபு முதல்வரை நோக்கி பாய்ந்தபடியே இருந்தார். அவரைஒருமுறை வெளியேற்றியும் கூட மீண்டும் மீண்டும் உள்ளே வந்து கடுமையானவார்த்தைகளால் பேசியபடி இருந்தார்.
அவருக்கும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கும் இடையே கடும்வாக்குவாதம் நடந்தது. இருவரும் சரமாரியாக ஒருமையில் வார்த்தைகளை பரிமாறிக்கொண்டனர்.
இத்தனை அமளி நடந்தும் கூட எதிர்க்கட்சித் தலைவரான ஓ.பன்னீர் செல்வம் தனதுகட்சியினரை அமைதிப்படுத்த முயற்சிக்கவே இல்லை. அமைதியாக நின்றுகொண்டிருந்தார். அவருக்கு அருகே செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோரும்அமைதியாக நின்றபடி இருந்தனர்.
இதைப் பார்த்த அமைச்சர் பரிதி இளம்வழுதி, பன்னீரை நோக்கி இப்படி அமைதியாகஇருக்கீங்களே, சேகர்பாபுவையும், மற்ற எம்.எல்.ஏக்களையும் கட்டுப்படுத்தமாட்டீர்களா என்று கோபமாக கேட்டார்.
அதற்கும் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக வீசினார் ஓ.பி. இதனால் ஏதோதிட்டத்துடனேயே அதிமுக அவைக்குள் வந்திருப்பதாக திமுகவினரும் காங்கிரசாரும்கூறினர்.
பின்னர் ஓபி, செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் அமைதியாக அங்கிருந்துவெளியேறினர். அவரைத் தொடர்ந்து பெண் எம்.எல்.ஏக்கள் வெளியேறினர்.
மற்ற உறுப்பினர்களை அவைக் காவலர்கள் பெரும்பாடு பட்டு வெளியேற்றினர்.












Click it and Unblock the Notifications