ஆட்சியில் பங்கு- பொடி வைத்த பீட்டர்
சென்னை:
சட்டசபையில் தனக்கே உரிய நகைச்சுவைப் பேச்சால், திமுக ஆட்சியில் பங்கு குறித்துநைச்சியமாக பேசி காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், சபையைக் கலகலக்கவைத்தார்.
சட்டசபையில் அடிதடி நடப்பதற்கு முன் பீட்டர் பேசுகையில், திமுக அரசுக்கு முழுஒத்துழைப்பையும் காங்கிரஸ் கட்சி வழங்கும். பெண் பார்த்தது முதல் நிச்சயதார்த்தம்வரை நாங்கள் உங்களுடன் இருந்தோம். மாப்பிள்ளைஅழைப்பின்போதும் உங்கள்பக்கம்தான் இருந்தோம். தாலி கட்டும் நேரத்திலும் உங்களுடன்தான் இருந்தோம்என்றார்.அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் அன்பழகனும், மின்துறை அமைச்சர்ஆற்காடு வீராசாமியும், பீட்டர் அத்துடன் நிறுத்திக் கொண்டால் நல்லது என்றுசிரித்தபடி கூறினர். சபையிலும் பெரும் சிரிப்பலை எழுந்தது. ஆனாலும் பீட்டர்விடவில்லை.
இப்போது நீங்கள் பூட்டிய அறைக்குள் சந்தோஷமாக குடும்பம் நடத்துகிறீர்கள்.நாங்கள் வெளியே பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கிறோம். எங்களிடம் இப்போதுகேட்கிறார்கள், மாப்பிள்ளை தோழர்களாகிய உங்களுக்கு எப்போது திருமணம் என்று.
அதை மூத்தவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று நாங்கள் பதில் சொல்லிவிட்டோம். மூத்தவர்கள் என்றால் அதில் கலைஞரும் அடக்கம் என்றார்.
பீட்டர் சொல்லிய மேட்டரின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட காங்கிரஸ்உறுப்பினர்கள் மேசைகளை பலமாக தட்டி வரவேற்றனர்.
பின்னர் சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் மத்திய அரசின் திட்டத்துக்குஜெயலலிதா அரசு முட்டுக்கட்டைப் போட்டார் என்று ஆரம்பித்து அதிமுக அரசைவிமர்சிக்க ஆரம்பித்தார் பீட்டர்.
அப்போது தான் அதிமுகவினர் டேய்.. உட்காருடா என்று ஆரம்பித்து கெட்ட கெட்டவார்த்தைகளால் பீட்டரை அர்ச்சனை செய்ய ஆரம்பிக்கவே அடிதடி மூண்டது.












Click it and Unblock the Notifications