இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்-2,500 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:
இந்தோனேஷியாவை இன்று மிக பயஙகர பூகம்பம் தாக்கியது. இதில் 2,500 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள யோக்யாகார்த்தா நகரின் அருகே இன்று அதிகாலை 5.54 மணிக்குஇந்த பூகம்பம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் இது 6.2 என்ற அளவுக்குப் பதிவானது.இதில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்பலர் பலியாகியுள்ளனர். இதுவரை சில நூறு உடல்களே மீட்கப்பட்டுள்ளன.
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும்ஆயிரக்கணக்கானவர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் கடந்த சில வாரங்களாகவே மெராபி என்ற எரிமலை அதீத வேகத்துடன் அனலை கக்கிவருகிறது. இந்த பூகம்பத்தால் அந்த எரிமலையின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications