தென் மேற்கு பருவ மழை தொடங்கியது!
டெல்லி:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அதிக மழையைக் கொடுக்கும் தென்மேற்குப் பருவ மழை வழக்கத்தை விட 6 நாட்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளது.
தென் மேற்கு பருவ மழைதான் இந்தியாவின் முதலாவது பருவ மழையாகும்.முக்கியமான மழையும் கூட.இந்த காலகட்டத்தில்தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதாவதுகேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரம், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்டவற்றில் நல்ல மழை பெய்யும்.
தமிழகத்திலும் இக்காலகட்டத்தில் அதிக மழை பெய்யும். வழக்கமாக ஜூன் மாதம்முதல் தேதியன்று கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். ஆனால்இந்த ஆண்டு முன்கூட்டியே மழை தொடங்கி விட்டது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் யாதவ் கூறுகையில், அரபிக்கடலில் வலுவான பருவக் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
கேரள, கர்நாடக கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.இதனால் கடந்த சில நாட்களாகவே கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு பருவ மழை தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள்தான் இவை. அடுத்த48 மணி நேரத்தில், கேரளா, லட்சத் தீவுகள், கடலோர கர்நாடகம் ஆகிய பகுதிகளில்பலத்த முதல் மிக பலத்த மழை பெய்யும்.
கேரள, தமிழக கடலோரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றார் யாதவ்.












Click it and Unblock the Notifications