சட்டசபை வன்முறை: ராமதாஸ் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரிலேயே வன்முறைச் சம்பவங்கள்அரங்கேறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதலாவது கூட்டத் தொடரிலேயேஅசம்பாவிதம் அரங்கேற்றப்பட்டு, முதல்வரைத் தாக்க அதிமுகவினர் பாய்ந்திருப்பதுஅதிர்ச்சி தருகிறது.தனது கட்சியின் உறுப்பினர்கள் செயலை கண்டிக்காமல், நியாயப்படுத்தும்ஜெயலலிதாவின் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.
விதிமுறைகளை மீறி செயல்படுவதும், பேசுவதும் தங்களைத் தேர்ந்தெடுத்தவாக்காளர்களுக்கு செய்யும் அவமரியாதை ஆகும்.
எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சி என்பது போல செயல்படக் கூடாது.
சட்டசபையில் நடந்த தாக்குதல் சம்பவம் சட்டசபை ஜனநாயகத்திற்குப் புறம்பானது.சட்டசபையில் ஜனநாயகம் தழைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ராமதாஸ்.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்தியகம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோரும் சட்டசபைசம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications