அதிமுகவினர் தற்கொலை: திமுகவுக்கு வைகோ கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தல் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அதிமுகவினர் தற்கொலைசெய்து கொள்வதை கேலி செய்து திமுக ஆதரவு ஏடுகள் செய்தி வெளியிடுவதுஅநாகரிகமான செயல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், நடந்து முடிந்தசட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பெரிய தோல்வி கிடைத்து விடவில்லை.

பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. தமிழக அரசியல்வரலாற்றில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சி உருவாகியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்தத் தோல்வி பெரிதான ஒன்று இல்லை என்றாலும் கூட இதைத் தாங்க முடியாமல்அதிர்ச்சியில் உயிர் நீத்தவர்கள், தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டவர்கள்என்பது, இதுபோன்ற துயரம் எங்குமே நடந்ததில்லை.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மன வேதனையோடு,வருத்தப்பட்டு, உயிர்களைப் போக்கிக் கொள்ள வேண்டாம் தொடர்ந்துவேண்டுகோள் விடுத்து வருகிறார்.

ஆனால் அதைக் கூட கொச்சைப்படுத்தி திமுக ஆதரவு ஏடுகள் கேலி செய்வது போலசெய்தி வெளியிடுவது, மனிதாபிமானமற்ற, அரசியல் நாகரிகம் அறவே இல்லாதசெயல்.

சட்டசபையில் அதிமுகவும், மதிமுகவும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிகளாகசெயல்படும். சிறந்த எதிர்க்கட்சி என்ற பெயரை நாங்கள் எடுப்போம்.

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டைஉறுதி செய்ய நாடாளுமன்றத்தில் உடனடியாக மத்திய அரசு சட்டத் திருத்தத்தைகொண்டு வர வேண்டும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+