எல்டிடிஈக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப் புலிகள் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுதெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டின் இறையாண்மைக்கும், பிரதேசஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமைவதுடன், இந்திய ஒன்றியத்தில் இருந்துஅதன் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதற்கும், பிரித்துக் கொடுப்பதற்கும்ஒப்பானதாகும். ஆகவே அது ஒரு சட்டவிரோத நடவடிக்கையின் வரம்புக்குள்வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய மீட்சிப் படை, தமிழ்நாடுவிடுதலைப் படை, தமிழர் பாசறை போன்ற விடுதலைப் புலிகள் ஆதரவான குழுக்கள்தொடர்பான பெரும்பாலன குற்றவியல் வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவின் சிலபகுதிகளிலும் வலுவான தொடர்புகள் உள்ளன.

அந்த அமைப்பு மருந்துகளுடன் சேர்த்து பெட்ரோல், டீசல் போன்ற இன்றியமையாப்பொருட்களை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்த தமிழ்நாட்டை ஒரு தளமாகபயன்படுத்தி வருகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையின் காரணமாக இனக் கலவரத்தின்எதிரொலி தமிழ்நாட்டிலும் வலுவாக காணப்படுகிறது.

இந்த கலவர நிலை இலங்கையில் நீடிக்கும் வரையில், தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவைப் பெருக்கும் வகையில் பிரிவினை உணர்வைத்தூண்டி விட அது முயலும்.

இந்த அமைப்பினுடைய தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள்இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாகஇருக்கிறது.

எனவே 1967ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசுஅறிவிக்கிறது.

மேலும் இந்த சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்படக் கூடிய எந்தவொரு ஆணைக்கும்உட்பட்டு இந்த அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்படும் நாளில் இருந்துஉடனடியாக அமலுக்கு வரும் என்று தமிழக அரசின் அறிவிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+