பசிபிக் கடல் பகுதியில் அடுத்தடுத்து பூகம்பம்:சுனாமி பீதியில் நியூ கினியா, டோங்கோ தீவுகள்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பசிபிக் பெருங்கடலில் பாப்புவா நியூ கினியா மற்றும் டோங்கோ தீவுகளுக்கு அருகே இரு சக்தி வாய்ந்தபூகம்பங்கள் ஏற்பட்டன.
பாப்புவா நியூ கினியா அருகே அந் நாட்டு நேரப்படி பகல் 1.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டடது. ரிக்டர் அளவுகோளில் 6.2 என்ற அளவுக்கு இந்த பூகம்பத்தின் தாக்கம் இருந்தது.இதைத் தொடர்ந்து டோங்கோ அருகே அந் நாட்டு நேரப்படி மாலை 4.36 மணியளவில் இந்த பூகம்பம்ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 6.7 என்ற அளவுக்குப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி தாக்கும் அச்சம் ஏற்பட்டதால் இரு தீவுகளையும் சேர்ந்த மக்கள் பெரும்பீதியில் ஆழ்ந்தனர். கடல் பகுதிகளை விட்டு ஓடினர்.
இதற்கிடையே நேற்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3,700யைத்தாண்டியுள்ளது. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications