பிரபல வழக்கறிஞர் வானமாமலை மரணம்
சென்னை:
தமிழகத்தின் பிரபல வழக்கறிஞரான என்.டி.வானமாமலை மரணம் அடைந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியவர் என்.டி.வி. எனஅழைக்கப்பட்ட வானமாமலை. 84 வயதான அவர் உடல் நலக்குறைவினால்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்றுகாலை நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை சென்னையில்சட்டம் பயின்றார். பிரபல வழக்கறிஞர் கே.டி.பாலாஜியிடம் ஜூனியராகபணியாற்றிய பின்னர் தனியாக தொழிலை மேற்கொண்டார்.
தமிழகத்தை உலுக்கிய பல்வேறு பிரபல வழக்குகளில் ஆஜராகிய பெருமைபடைத்தவர் வானமாமலை.
எம்.ஜி.ஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட வழக்கில் ராதாவுக்காக ஆஜராகிவாதாடினார். மதுரை தூக்குமேடை பாலு வழக்கு, நெல்லை சதி வழக்கு, சீக்கியர்கலவரம் தொடர்பான வழக்கு என பல்வேறு பிரபலமான வழக்குகளில் ஆஜராகியவர்வானமாமலை.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.கட்சியில் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்றுள்ளார்.
தொழிலாளர்களின் பாதுகாவலராக திகழ்ந்து வந்த வானமாமலை தன்னைத் தேடி வந்தஅட்வகேட் ஜெனரல் பதவியையும் இதற்காகவே வேண்டாம் என்று உதறியவர்.
தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அசோக்குமார், ரகுபதி, பாஷா ஆகியோர்வானமாமலையின் ஜூனியர்களாக இருந்தவர்கள்.
வானமாமலை மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் ஆகியோர் இரங்கல்தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications