இந்தோனேஷிய பூகம்பத்தில் உயிர் தப்பிய தமிழ் பட குழு
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சென்னையைச் சேர்ந்த டாகுமெகன்டரிபடக் குழுவினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தோனேஷியாவில் ஜாவா பகுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 5,000க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பெரும் பூகம்பத்தில் சுற்றுலா நகரங்களானயோக்யகர்தா, பாண்டுல் ஆகிய நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.பிரம்பனன் என்ற நகரில் உள்ள மிகப் பழமையான இந்துக் கோவில் முற்றிலும்சேதமடைந்துள்ளது.
இந் நிலையில் இந்தோனேஷியாவுக்குப் படப்பிடிப்புக்குப் போன சென்னையைச்சேர்ந்த டாகுமென்டரி குழு ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனம் தொலைக்காட்சிபடங்களை தயாரித்து வருகிறது.
இப்போது, மத்திய அரசுக்காக ஆசிய நாடுகளில் இந்திய கலாச்சாரம் என்ற தலைப்பில்ஒரு டாகுமென்டரி படத்தைத் தயாரித்து வருகிறது.
இதன் படப்பிடிப்புக்காக இந் நிறுவன அதிபர் கிருஷ்ணசாமி, அவரது மனைவிமோகனா, மகள் லதா, ஒளிப்பதிவாளர் மது அம்பாட் உள்ளிட்ட 7 பேர் கொண்டகுழுவினர் இந்தோனேஷியா சென்றிருந்தனர்.
இந்த கிருஷ்ணசாமி, நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதாவின் உறவினர் ஆவார்.
யோக்யகர்தா நகரில் ஹோட்டலில் தங்கிய படப்பிடிப்புக் குழுவினர் அருகில் உள்ளவேறு ஒரு நகருக்குச் சென்றிருந்தனர்.
கிருஷ்ணசாமி ஹோட்டலிலேயே தங்கிவிட்டார்.
படப்பிடிப்பு முடிந்து திரும்ப இரவு தாமதமாகி விட்டதால் யோக்யகர்தா நகருக்குமுன்பாகவே ஒரு இடத்தில் ஹோட்டலில் படக் குழுவினர் தங்கினர்.
அப்போதுதான் பூகம்பம் ஏற்பட்டது. இதில் யோக்யகர்தா நகரில் கிருஷ்ணசாமிதங்கியிந்த ஹோட்டல் பெரும் சேதத்தை சந்தித்தது. அப்போது குளித்துக்கொண்டிருந்த கிருஷ்ணசாமி கட்டிய துண்டோடு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.பின்னர் ஹோட்டலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலிலும் பூகம்பத்தின்பாதிப்புகள் இருந்தன.
பூகம்பம் நின்ற பிறகு அனைவரும் ஹோட்டல்களை காலி செய்து விட்டுயோக்யகர்தா நகரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு நகருக்குபுறப்பட்டுச் சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications