எங்களுக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கும்!
சென்னை:
சட்டசபையில் இன்றும் கல்யாணப் பேச்சு களைகட்டியது.
திமுக ஆட்சியில் பங்கு கோரும் வகையில், சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ்துணைத் தலைவர் பீட்டல் அல்போன்ஸ் தனக்கே உரிய பாணியில் பொடி வைத்துப்பேசினார்.அப்போது பெண் பார்த்து, நிச்சயதார்த்தம் நடத்தி, தாலி கட்டி உள்ளே அனுப்பும் வரைஉங்கள் (திமுக) கூடவே இருந்தோம். இப்போது எங்களைப் பார்த்து மாப்பிள்ளைத்தோழனுக்கு எப்போது கல்யாணம் என்று கேட்கிறார்கள்.
இதை பெரியவர்கள்தான் (கருணாநிதியை சுட்டிக் காட்டி) முடிவு செய்ய வேண்டும்என்று பேசினார்.
ஆட்சியில் பங்கு கேட்டு வரும் காங்கிரஸாரின் எண்ணத்தைப் பிரதிபலிப்பது போலபீட்டர் அல்போன்ஸ் நாசூக்காக பேசியதை ஆளுங்கட்சியினரும் ரசித்தனர்.
இந் நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் திருப்பூர் கோவிந்தசாமியும் ஒருநாள் தனது கட்சியும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை சட்டமன்றத்தில்வெளிப்படுத்தினார்.
கோவிந்தசாமி பேசுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு பேசிய பீட்டர்அல்போன்ஸ், எல்லோரும் போய் பெண் பார்த்தோம், எல்லோரும் இணைந்துதிருமண வேலைகளை செய்தோம், இப்போது திருமணம் முடிந்து தாம்பத்தியத்தையும்தொடங்கி விட்டீர்கள். துணை மாப்பிள்ளையாக வந்தவர்களுக்கு எப்போதுதிருமணம் என்று கேட்டார்.
அப்படி நாங்களும் பேசி அரசுககு தர்மசங்கடத்தை ஏற்படுத்த மாட்டோம். அதற்காகநாங்களும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்க மாட்டோம்.
சொந்தக் காலில் குடும்பம் நடத்தக் கூடிய அளவுக்கு சக்தியைப் பெறும்போதுதிருமணம் செய்வது பற்றி நாங்களும் சிந்திப்போம் என்றார்.
கோவிந்தசாமியின் பேச்சை கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள்மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications