ஊழலை ஒழிக்க வேண்டும்-கேப்டன் கன்னிப் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இளைஞர்கள், ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் குறித்து ஆளுநர் உரையில்தெளிவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டுவிஜயகாந்த் பேசினார். தனக்கும், தேமுதிகவுக்கும் வாக்களித்த 28 லட்சம் வாக்காளர்பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு தனது கன்னிப் பேச்சைத் தொடர்ந்தார்விஜயகாந்த்.

அவர் பேசுகையில், ஜனநாயகம் என்ற கருவி மூலம் நல்லாட்சி என்ற நோக்கம்நிறைவேற வேண்டும். ஜனநாயகம் என்பது வேண்டாத ஆட்சியை நீக்கும், வேண்டியஆட்சியை கொண்டு வரவும் மக்களுக்கு தரப்படும் கருவியாகும்.

ஆனால் இன்றைய ஜனநாயக கருவியில், பண நாயகம் என்ற துரு பிடித்துள்ளது.அரசியலில் ஊழல் செய்து பணம் சேர்க்கவும், அதன் ஒரு பகுதியை தேர்தலுக்காகசெலவழித்து மீண்டும் பதவிக்கு வந்து, மேலும் பணம் சேர்ப்பது என்ற நிலைஉருவாகி விட்டது.

இதனால் ஏழை, எளிய மக்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியவில்லை. எனவேநல்லவர்கள், நாட்டுக்குத் தொண்டு செய்ய விரும்புபவர்கள் ஏழைகள் ஆனாலும்அரசியலில் பங்கு கொள்ளும் அளவுக்கு பண நாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தைஉருவாக்குவது அனைவரின் கடமையாகும்.

ஆளுநர் உரையில் ஊழல் மூலம் சொத்து சேர்த்து ஜனநாயகத்தை மாசுபடுத்தும்சக்திகளை அடையாளம் காணவும், நடவடிக்கை எடுக்கவும், சொத்துக்களைக்கைப்பற்றவும், எந்தவித ஊழல் தடுப்பு நடவடிக்கையும் இல்லாதது ஏமாற்றம்தருகிறது.

பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உழைப்பை நாட்டுக்குத் தர தயாராகஉள்ளனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள எந்தத் திட்டமும் இல்லை.

ஒருவேளை பட்ஜெட்டில் இத்தகைய திட்டம் இடம்பெற்றால் அதை வரவேற்பேன்.இதேபோல ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டங்களில் அரசு அக்கறைசெலுத்த வேண்டும்.

காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை, கச்சத் தீவுபிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயுள்ளன.இழந்த உரிமைகளைப் பெற அரசு எத்தகைய முயற்சிகள் எடுத்தாலும் தேமுதிகஒத்துழைப்பு தரும்.

விருத்தாச்சலம் தொகுதியில், சாலை, பாலம், குடிநீர் வசதிகள் இல்லை. அதை செய்துதர வேண்டும். அந்தப் பகுதியில் பொறியியல் மற்றும் மகளிர் கல்லூரிகளை அமைக்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாச்சலத்தில் பாலம் கட்டித் தர வேண்டும்.

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்ததை வரவேற்கிறேன்.இதேபோல இலவச அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். விவசாயிகள் கூட்டுறவுவங்கிகளில் பெற்ற கடன்களை மட்டுமல்லாது, இதர வங்கிகளிலும் வாங்கியுள்ளகடன்களை தள்ளுபடி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வப்போது விவசாயிகளுக்கு கடன் அளிப்பதை விட விவசாயப்பொருளாதாரத்தை சீர்திருத்தி, அவர்களின் விளை பொருள்களுக்கு கட்டுப்படி ஆகக்கூடிய விலையைப் பெற்றுத் தருவதன் மூலமே அவர்களை கடன் சுமையிலிருந்துகாப்பாற்ற முடியும் என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+