சேலம் அருகே வேன் கவிழ்ந்து 6 பெண்கள் பலி
சேலம்:
சேலம் அருகே தொப்பூர் என்ற இடத்தில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விழுந்ததில் 6பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள காளிகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தகட்டத் தொழிலாளர்கள் வேன் மூலம் தொப்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.வேலை முடிந்து மீண்டும் தங்களது கிராமத்திற்குத் திரும்பினர். அவர்கள் வந்தடெம்போ வேனில் கான்க்ரீட் கலக்கும் இயந்திரத்தையும் கயிற்றில் கட்டி கொண்டுவந்தனர். கொட்டாய் என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது கலவைஎந்திரத்தைக கட்டியிருந்த கயிறு திடீரென அறுந்தது.
இதையடுத்து எந்திரம் வேறு பக்கமாக வேகமாக ஓடியது. வேன் படு வேகத்தில்சென்றபோது இச் சம்பவம் நடந்ததால் வேனின் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார்.தாறுமாறாக ஓடிய வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
25அடி ஆழமுள்ள அந்தப் பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததால் வேனில் பயணம் செயதஅனைவரும் வேனுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இந்தக் கோர விபத்தில் நந்தினி, பாப்பா, சிவகாமி, லட்சுமி ஆகிய பெண்கள் சம்பவஇடத்திலேயும், சுமதி, சசிகலா ஆகியோர் மருத்துவமனையிலும் இறந்தனர்.
27 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்மதிவாணன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications