மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள்மைக்குகளை வீசி ரகளை, அடிதடி- கைது
சென்னை:
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய துணை மேயர்கராத்தே தியாகராஜனை எதிர்த்து இன்று அதிமுக கவுன்சிலர்கள் பெரும் ரகளையில்ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி துணை மேயராக இருந்து வரும் கராத்தே தியாகராஜன் மீதுகடந்த அதிமுக ஆட்சியில் சில வழக்குகள் போடப்படவிருந்தன. போயஸ்தோட்டத்துடன் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனையில் அவரை உள்ளே போட முயற்சிநடந்தது.
இதை அறிந்த கராத்தே தலைமறைவாகி விட்டார். அவர் தலைமறைவாக இருந்தகாலத்தில் 3 முறை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. மூன்றிலும் கராத்தேதியாகராஜனால் கலந்து கொள்ள முடியவில்லை.
மாநகராட்சி விதிமுறைப்படி, ஒரு உறுப்பினர் தொடர்ந்து 3 முறை கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டால் அவரது உறுப்பினர் பதவி தானாகவே ரத்தாகி விடும். அந்தவகையில் கராத்தே தியாகராஜனின் உறுப்பினர் பதவியும் காலியாகி விட்டதாகஅதிமுக கூறி வருகிறது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
![]() |
| கருப்பு முகமூடியுடன் அதிமுக கவுன்சிலர்கள் |
3 மாத இடைவெளிக்குப் பின்னர் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்றுநடைபெற்றது. இக்கூட்டத்தை தானே தலைமை தாங்கி நடத்தப் போவதாக இப்போதுகாங்கிரஸில் உள்ள கராத்தே தியாகராஜன் அறிவித்திருந்தார்.
கராத்தே விலக வேண்டும்: அதிமுக
இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கராத்தே தியாகராஜன் தனதுஉறுப்பினர் பதவியை இழந்து விட்டார். எனவே தார்மீக அடிப்படையில் அவர்கூட்டத்தை நடத்த முடியாது என்று அதிமுக கூறுகிறது. மாநகராட்சி அதிமுக தலைவர்சுகுமார் பாபு இதுகுறித்துக் கூறுகையில்,
அதிமுக ஆதரவுடன் துணை மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கராத்தேதியாகராஜன் இப்போது காங்கிரஸில் சேர்ந்து விட்டார். அதன் பின்னும் அவர் துணைமேயர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது நியாயமற்றது, சட்டவிரோதமானது.எனவே அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கராத்தே தியாகராஜனை பதவி நீக்கம் செய்யுமாறு மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்எழுதியுள்ளோம். ஆனால் இதுவரை பதில் வரவில்லை. செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்குள் எங்களுக்குப் பதில் கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துஅப்போது முடிவு செய்வோம் என்றார் சுகுமார் பாபு.
விலக மாட்டேன்- கராத்தே:
இதற்கிடையே, நான் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று கராத்தேதியாகராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நான் மூன்று கூட்டங்களில் கலந்துகாள்ளவில்லை என்று கூறுவதே முதலில்தவறு. முதல் இரண்டு கூட்டங்கள்தொடர்பாக நான் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் மீது தீர்ப்பு வெளியாகாத நிலையில் நான்பதவி விலக வேண்டும் என்று கோருவது அர்த்தமற்றது என்று கூறினார் கராத்தே.
இந்த பரபரப்பான பின்னணியில் இன்று காலை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்தொடங்கியது.
கூட்டம் தொடங்கியவுடனேயே அதிமுக உறுப்பினர்கள் தலைவர் சுகுமார் பாபுதலைமையில் கராத்தே தியாகராஜன் கூட்டத்தை நடத்தக் கூடாது, அதற்கு அவர் தகுதிஅற்றவராகி விட்டார். அவரை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றுகோரி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
கருப்பு முகமூடி:
கருப்புத் துணியால் முகத்தையும் கண்ணையும் கட்டிக் கொண்டு அவர்கள்தியாகராஜனுக்கு எதிராக சத்தமிட்டனர். அப்போது பேசிய தியாகராஜன், இந்தவிவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் ஆணையர் விஜய்குமார்பதிலளிப்பார் என்றார்.
விஜய்குமார் எழுந்து பதிலளிக்க முயன்றபோது, கராத்தை மீது அதிமுகவினர்மைக்குகளைப் பிடுங்கி வீசினர். நோட்டுகளையும், புத்தகங்களையும் தியாகராஜன்மீது வீசி கலாட்டா செய்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கராத்தே தியாகராஜன் இருக்கை முன்பு கூடிஅவரை வெளியேறுமாறு ஆவேசமாக கூச்சலிட்டனர். இது பின்னர் ரகளையாகமாறியது. மைக்குகள் உடைக்கப்பட்டன. கராத்தே தியாகராஜனை நோக்கி அதிமுககவுன்சிலர்கள் பாய்ந்தனர்.
அடிதடி:
இதைத் தொடர்ந்து கராத்தேவுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் கட்சியின்உறுப்பினர்கள் திரண்டு வந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.எல்லோருக்கும் சரமாரியாக அடி விழுந்தது. இந்த அமளி துமளியால் மாமன்றக் கூட்டத்தைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற தியாகராஜன் உத்தரவிட்டார்.போலீஸார் வரவழைக்கப்பட்டு அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும்வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
போலீசுடன் மோதல்:
கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சிவளாகத்தை விட்டு வெளியே வந்து சாலை மறியல் செய்ய யன்றனர். ஆனால்அவர்களை சாலையில் இறங்கவே போலீஸார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும்தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது அதிமுக கவுன்சிலர் வெற்றிவேல், காவல்துறை அதிகாரி ஒருவரை தள்ளிவிட்டு அடிக்க முயன்றார். இதில் அந்த அதிகாரி கீழே விழப் போனார். அருகில்இருந்த காவலர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக கவுன்சிலர்களைக் கைது செய்யுமாறு கராத்தேதியாகராஜன் உத்தரவிடவே போலீஸார் 76 அதிமுக கவுன்சிலர்களையும் கைது செய்துஅங்கிருந்து அப்புறப்படுத்தினர். போலீஸ் அதிகாரியைத் தாக்கிய வெற்றிவேல் மீதுகிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸாருக்கு கராத்தே தியாகராஜன்உத்தரவிட்டுள்ளார்.
எப்படி எப்படி....?
போராட்டத்தில் ஈடுபட்ட அதிக கவுன்சிலர்கள் சிலர், இந்து படத்தில் வரும் சமைஞ்சது எப்படி என்ற பாட்டின் மெட்டில், காணாமல்போனகராத்தே திரும்பி வந்தது எப்படி எப்படி என்று பாட்டுப் பாடி கோஷமிட்டனர்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அடிதடி நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால்அங்கு இன்று காலை முதலே அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.













Click it and Unblock the Notifications