சட்டசபைக்கு வராத ஜெ-ஏமாந்த எம்எல்ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை

எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமக பொதுச் செயலாளர்ஜெயலலிதா இன்று சட்டசபைக்கு வரவில்லை. இது தெரியாமல் அதிமுக எம்எல்ஏக்கள்அனைவரும் ஜெயலலிதா வருகைக்காக நெடுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதிமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிர்க் கட்சித்தலைவருக்கான அங்கீகாரத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் வழங்கினார். இத்தகவலை அவர் இன்றுநிருபர்களிடம் தெரிவித்தார்.

இந் நிலையில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் முடிவடைந்தநிலையில் இன்று எதிர்க் கட்சித் தலைவரான ஜெயலலிதா பேசியிருக்க வேண்டும்.அதன் பின்னர் முதல்வர் பதிலளித்து இருக்க வேண்டும்.

ஆனால், ஜெயலலிதா திடீரென சட்டசபைக்கு வராமல் போனதால் எதிர்க் கட்சித்தலைவர் உரை நிகழ்த்தாமலேயே ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு கருணாநிதிபதிலளித்தார்.

இந் நிலையில், ஜெயலலிதா வெளியிட்டுள்ள நீளமான அறிக்கை விவரம்:

அதிமுக உறுப்பினர்கள் யாரும் சபையில் பேசக் கூடாது என்று ஏற்கனவே தீர்மானம்செய்து வைத்துக் கொண்டு திமுகவினர் செயல்படுகிறார்கள்.

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 60 அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகதற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் குரலை எடுத்துவைப்பதற்காக நான் சபைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

ஆக்கப்பூர்வமாக விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அதிமுகஉறுப்பினர்கள், பொதுமக்கள் கோரிக்கைக்கு ஏற்ப நான் எதிர்க்கட்சித் தலைவராகவும்,பொறுப்பேற்க இசைந்தேன்.

இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நேற்றுபிற்பகலே சபாநாயகரிடம் முறையான கடிதம் கொடுக்கப்பட்டது.

அதற்கான ஆணை நேற்று நள்ளிரவு 12 மணிக்குத்தான் எனக்கு வழங்கப்பட்டது.எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் வழங்குவதற்கு அவர்களுக்கு 12 மணி நேரம்தேவைப்பட்டுள்ளது.

இன்று என்னை பேச அனுமதிப்பீர்களா என்று கேட்டதற்கும், இதுவரை பதில் இல்லை.இறுதியில் எதிர்க்கட்சித் தலைவரின் உரை இல்லாமலேயே ஆளுநர் உரை மீதானதீர்மானம் நிறைவேறியிருக்கிறது.

கோட்டைக்குச் சென்ற அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளேயே நூழையவிடாமல் தடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விவாதத்தில்கலந்து கொள்ள நான் ஆயத்தமாக இருந்தபோதிலும், சட்டமன்றச் செயலரின்செயலகத்திலிருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. (இவர் சட்டசபைக்கு வரஎதுக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லை)

இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. எதிர்க்கட்சித் தலைவரை பேசவே விடக்கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

சட்டசபை வரலாற்றில் இந்த நாள் கருப்பு நாள், ஜனநாயகத்தின் குரல்வளைநெரிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

கவுன்சிலர்கள் கைதுக்கு கண்டனம்:

இதேபோல சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்களைக் கைதுசெய்ததுள்ளதற்கும் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொடர்ந்து 3 முறை மாநகராட்சிக்கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் கலந்து கொள்ளாததால், அவர் துணை மேயர்பதவியில் தொடர்ந்து நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் என்ற தீர்மானத்தைநிறைவேற்ற வலியுறுத்திய அதிமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.

பின்னர் சாலை மறியல் செய்ய முயன்ற அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தசெயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட அதிமுககவுன்சிலர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

ஜெயலலிதா அவைக்கு வர மாட்டார் என்ற விவரம் அதிமுக எம்எல்ஏக்களுக்குதெரிவிக்கப்படவில்லை. முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்துக்கும்தகவல் வரவில்லை.

இதனால் போலீசாருடன் மோதியபடி ஜெயலலிதாவின் வருகைக்காக அதிமுக எம்எல்ஏக்கள் கோட்டையில்காலை முதல் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கடந்த சனிக்கிழமை ஜெயலலிதாவை சபாநாயகர் வரும் 2ம் எண் கேட் வழியாக போலீசார் அனுமதித்தனர்.

ஆனால், இன்று ஜெயலலிதாவை அந்த வழியாக அனுமதிக்காமல் மற்ற எம்எல்ஏக்கள் வரும் கேட் வழியாகவேஅனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து வந்தாகவேண்டும். அவர் அவைக்கு வராததற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிகிறது.

மதிமுக, விசியும் புறக்கணிப்பு:

ஜெயலலிதா வராத நிலையில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏக்களும் இன்று சட்டசபைக்கு வராமல்புறக்கணித்தனர்.

ஜெவுக்கு வைகோ, திருமா வாழ்த்து:

இந் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் அறிக்கை மூலம் வாழ்த்தியுள்ளார்.

சட்டசபை அதிமுக தலைவராக (எதிர்க்கட்சித் தலைவராக) ஜெயலலிதா நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை அவரதுஇல்லத்திற்குச் சென்று வைகோ சந்தித்தார். இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சிறிது நேரம் பேசினர்.

இதேபோல விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுகடமையாற்ற முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது.

மக்களின் கட்டளையை ஏற்று பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் விடுத்த கோரிக்கையை ஏற்று தனது முடிவை மாற்றிக்கொண்ட ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

இதேபோல, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான தண்டனையைக் குறைக்க சபாநாயகருக்குப் பரிந்துரைத்த முதல்வர் கருணாநிதிக்கும் அவர் நன்றிதெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+