எல்டிடிஈக்கு ஐரோப்பிய யூனியன் தடை: ஜப்பானில் இலங்கைக்கு உதவும் நாடுகள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கைக்கு உதவும் நாடுகளின் கூட்டம் இன்று ஜப்பானில் நடந்தது.
இதில் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, நார்வே, ஜப்பான் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது.இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்தும், அமைதிப் பேச்சுக்கள் குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது. இலங்கையில் போர் வெடித்தால் உதவிகள் நிறுத்தப்படும் என இந்த நாடுகள் ஏற்கனவேஅறிவித்துள்ளன.
இதற்கிடையே புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் தடை செய்துள்ளது. பிரஸல்சில் நடந்த ஐரோப்பியயூனியன் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் புலிகளின் நிதி மற்றும் சொத்துக்கள்கையகப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications