ஜெயேந்திருடன் சந்திப்பு-கோ.சி மணி விளக்கம்
சென்னை:
திமுகவுக்கு வாக்களித்ததற்காக நன்றி சொல்லவே சங்கர மடம் சென்றேன். அப்போதுஜெயேந்திரர் இருந்ததால் அவரையும் பார்த்து நன்றி சொன்னேன் என்றுகூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி விளக்கம் அளித்துள்ளார்.
கும்பகோணம் வந்திருந்த ஜெயேந்திரரை, அத்தொகுதி திமுக எம்.எல்.ஏவும்கூட்டுறவுத்துறை அமைச்சருமான கோ.சி.மணி மற்றும் திமுகவினர் சென்று சந்தித்துபொன்னாடை போர்த்தி வணங்கியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரரை திமுக அமைச்சர் சந்தித்ததால்சலசலப்பு ஏற்பட்டது. இந்த சந்திப்பு எனக்கே ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும்உள்ளது. அமைச்சரிடம் விளக்கம் கேட்பேன் என்று முதல்வர் கருணாநிதிதெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜெயேந்திரரை சந்தித்தது குறித்து கருணாநிதியிடம் கோ.சி.மணிவிளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது கும்பகோணத்தில் உள்ள சங்கர மடத்திற்கும்சென்று ஓட்டு வேட்டையாடினேன். அங்குள்ள ஊழியர்களிடம் தமக்குவாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
அதன்படி அவர்களும் வாக்களித்தனர். அதற்கு நன்றி தெரிவிக்கவே சங்கர மடம்சென்றேன். மடத்திற்கு சென்ற நேரத்தில் ஜெயேந்திரர் அங்கு இருந்ததால், அவருக்குசால்வை போர்த்தினேன் என்று மணி விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications