போலீஸாரால் சுடப்பட்ட உருண்டை ராஜன் பலி
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி உருண்டைராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன் உருண்டை ராஜன். அவன் மீது மொத்தம்27வழக்குகள் உள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 17 வழக்குகள்நிலுவையில் உள்ளன. 2 கவுன்சிலர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த உருண்டை ராஜன் பாளையங்கோட்டை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.கடந்த 14ம் தேதி வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டஉருண்டை ராஜன், திரும்பி நெல்லை வரும் வழியில் திருச்சி பஸ் நிலையத்தில்போலீஸாரை ஏமாற்றி விட்டுத் தப்பினான்.
அவனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது நாகர்கோவில் அருகேகல்லுவிளை என்ற இடத்தில் உருண்டை ராஜன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை போலீஸார் அந்தப் பகுதியைமுற்றுகையிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த உருண்டை ராஜனைபோலீஸார் மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் தன்னிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் மீதுவீசி தாக்க முயன்றான் ராஜன். இதில் 3 போலீஸார் காயமடைந்தனர்.
இருப்பினும் உருண்டை ராஜனை சுற்றி வளைத்த போலீஸார் சரமாரியாக சுட்டனர்.இதில் உடலில் 3 குண்டுகள் பாய்ந்து சுருண்டு விழுந்தான் ராஜன்.
உடனடியாக அவனை நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டுசென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு ராஜன்சிகிச்சை பலனின்றி இறந்தான்.












Click it and Unblock the Notifications