கடனுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை: கை கழுவினார் அன்பரசு!
சென்னை:
சென்னை பைனான்சியரிடம் எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் ரூ. 35 லட்சம்பணத்தை கடனாகப் பெறவில்லை, இதுதொடர்பாக எந்தக் காசோலையும் தரவில்லை.அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே கிடையாது என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி.அன்பரசு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முகுல்சந்த் போத்ரா என்பவரிடம்நானும், எனது குடும்பத்தினரும் ரூ. 35 லட்சம் பணத்தை கடனாக வாங்கியதாகவும்,அதைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் போத்ரா என்பவர் புகார்கூறியுள்ளார்.மேலும், இந்த கடன் தொகைக்காக நாங்கள் காசோலை கொடுத்ததாகவும், அது பணம்இல்லாத காரணத்தால் திரும்பி வந்து விட்டதாகவும் கூறி சென்னை எழும்பூர் 8வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் மோசடி வழக்கையும் அவர் தொடர்ந்துள்ளார்.
போத்ரா யார் என்றே எங்களுக்குத் தெரியாது. நேரில் பார்த்ததும் கிடையாது. எந்தக்கடனையும் நாங்கள் வாங்கவும் இல்லை. இந்த நிலையில் காசோலையை எப்படிநாங்கள் கொடுத்திருக்க முடியும்?
இந்த வழக்கு அப்பட்டமான பொய் வழக்கு. அரசியல் ரீதியாக எங்களைக்களங்கப்படுத்தி, பயமுறுத்தி, பணம் பறிக்கும் உள்நோக்கத்தோடு இந்த பொய் வழக்குதொடரப்பட்டுள்ளது.
இவருடைய மோசடி நடவடிக்கைகளை முறியடிக்க சட்டப்படி நாங்கள் நடவடிக்கைஎடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் அன்பரசு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications