தோல்வியை மறப்போம்-ஜெயா அட்வைஸ்
சென்னை:
தேர்தல் தோல்வியை மறந்து விட்டு ஆக்கப்பூர்வமான கட்சிப் பணியாற்றுவதேஇப்போது அதிமுகவினரின் கடமையாகும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து கவலையிலும், அதிர்ச்சியிலும் அதிமுகதொண்டர்கள் தங்களது இன்னுயிரை நீத்து வருகின்றனர். இதனால் நான் மிகுந்ததுயரம் அடைந்துள்ளேன்.
இந்த துயர சாவுகள் தினசரி தொடர்ந்து வருவது கண்டு ஆற்றொணாத் துயரமும்,அளவற்ற வருத்தமும் அடைகிறேன்.
தேர்தல் தோல்வி தற்காலிகமானதுதான். அதிமுகவுக்கு மிகச் சிறந்த எதிர்காலம்உண்டு. எனவே கவலையோ, அதிர்ச்சியோ அடைய வேண்டியதில்லை என்பதைதிரும்பத் திரும்பக் கூறி வருகிறேன்.
அதிமுக தொண்டர்கள் ஆக்கப்பூர்வமான கட்சிப் பணிகளை ஆற்றுவதேஇப்போதைய கடமை என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
இன்று சட்டசபைக்கு வரவில்லை:
இந் நிலையில் எதிர்க் கட்சித் தலைவியாக தேர்வான ஜெயலலிதா இன்றும் சட்டசபைக்கு வரவில்லை.












Click it and Unblock the Notifications