பாண்டு, 10 அதிமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு:விரைவில் அதிமுக பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது?
சென்னை:
போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முன்னாள் அமைச்சர் கும்பிடு புகழ்பாண்டுரங்கன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நேற்று சட்டசபைக்குவருவதாக இருந்தது. இதனால் அவரை வரவேற்க சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுகஎம்.எல்.ஏக்கள் அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு வந்தனர்.
![]() |
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் போலீஸாருடன் மோதலில்ஈடுபட்டனர். பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் தலைமைச்செயலக வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அங்கு 2வது நுழைவாயில் வழியாக அவர்கள் சட்டசபை வளாகத்திற்குள் நுழையமுயன்றனர். ஆனால் வட சென்னை இணை ஆணையர் ரவி தலைமையில்குவிந்திருந்த போலீஸார் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.
இந்த இரு நிகழ்வுகளிலும் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் காவல்துறைஅதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விரலை நீட்டியும் கண்கணைஉருட்டியும் மீசையை முறுக்கியபடியும் போலீசாரை மிரட்டினார்.
இணை ஆணையர் ரவிக்கும், பாண்டுரங்கனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்நடந்தது. அப்போது அவரை பாண்டு பிடித்துத் தள்ளினார்.
![]() |
இந்த வழக்கின் கீழ் பாண்டுரங்கன் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. இந்நிலையில் இன்றும் பாண்டுரங்கன் உள்ளிட்ட சில அதிமுக எம்.எல்.ஏக்கள்சட்டசபைக்கு வந்தனர். ஆனால் அவர்களை சட்டசபை வளாகத்திற்குள் நுழையபோலீஸார் அனுமதிக்கவில்லை.
இதனால் சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.
கவுன்சிலர்கள் மீது வழக்கு:
இதேபோல, சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜன்மீது காகிதக் கட்டுகள், மைக்குகளை தூக்கி வீசி ரகளை செய்ததாக அதிமுககவுன்சிலர்கள் 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அதிமுக தலைவர் சுகுமார்பாபு,வெற்றிவேல் உள்ளிட்ட 10 கவுன்சிலர்கள் துணை மேயரைத் தாக்க முயன்றதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் கீழ் 10கவுன்சிலர்களும் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
6 எம்எல்ஏக்கள் கைது?
![]() |
அந்த கோரிக்கையை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு சபாநாயகர் ஆவுடையப்பன்அனுப்பி வைத்துள்ளார். உரிமைக் குழுவின் முடிவுக்குப் பின்னர் ஆறு பேரும் கைதுசெய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மீதும் உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்னும் சில நாட்களில் அடுத்தடுத்து பல்வேறு அதிமுக பிரமுகர்கள்உள்ளே போகக் கூடும் என்று தெரிகிறது.
சட்டசபைக் கூட்டம் முடிவடைந்தது:
இதற்கிடையே தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. சபாநாயகர் ஆவுடையப்பன் சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.மீண்டும் ஜூன் 2வது வார வாக்கில் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்று தெரிகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் கடந்த 26ம் தேதி அதிமுக உறுப்பினர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர், முதல்வர் கருணாநிதியையும் தாக்க முயற்சி நடந்தது,மைக்குகள் உடைக்கப்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்துவிட்ட நிலையில் அதிமுகவினர் மீதான கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்















Click it and Unblock the Notifications