தேமுதிகவில் இணைந்தார் வைகோவின் பொடா தோழர்!
சென்னை:
வைகோவுடன் பொடா சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்த மதுரைதிருமங்கலத்தைச் சேர்ந்த மதிமுக பிரமுகர் பொடா நாகராஜன் மதிமுகவிலிருந்துவிலகி விஜயகாந்த் முன்னிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில்இணைந்தார்.
வைகோவோடு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாத சிறை வாசம்அனுபவித்தவர் நாகராஜன். சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியைக்கேட்டிருந்தார் நாகராஜன்.ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக மதுரை புறநகர் மாவட்ட மதிமுகசெயலாளர் வீர. இளவரசனுக்கு சீட் கிடைத்தது.
இதனால் அதிருப்தியில் இருந்த நாகராஜன் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகுவதாகஅறிக்கை விட்டார்.
ஆனால் சில மணி நேரங்களில் தனது முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டார். என்றும்வைகோவுடன்தான் இருப்பேன் என்று கூறினார்.
இந் நிலையில், தனது தலைவரைப் போலவே இன்று இன்னொரு முடிவைஎடுத்துள்ளார்.
அதன்படி இன்று மதிமுகவிலிருந்து விலகி விஜயகாந்த் கட்சியில் இணைந்தார்நாகராஜன்.
சென்னைய கோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் கல்யாண மண்டப வளாகத்தில்உள்ள விஜயகாந்த் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த நாகராஜன்,விஜயகாந்த்தை சந்தித்து பொன்னாடை போர்த்தி அவரது கட்சியில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதிமுகவுக்காக நான் அரும்பாடுபட்டேன். வைகோவுடன் பொடா சட்டத்தின் கீழ் 19 மாதங்கள் சிறையில்அடைக்கப்பட்டேன். தேர்தலில் போட்டியிட சீட் கேட்டேன். ஆனால் தர மறுத்துவிட்டார்கள்.
அதிமுகவுடன் மதிமுக கூட்டணி வைத்தது எனக்கு ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை.அந்த அதிருப்தியில் இருந்து வந்த எனக்கு விஜயகாந்த் கட்சியின் கொள்கைகள்,அதன் செயல்பாடுகள் பிடித்துப் போனதால் இன்று தேமுதிகவில் இணைந்துள்ளேன்.
அவரது கட்சி குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதுதான் என்னைஇக்கட்சியின் பால் ஈர்க்க முக்கிய காரணம் என்றார் நாகராஜன்.
நாளைக்கு விஜய்காந்த், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாகராஜன் என்னசெய்வாரோ?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications