பள்ளிகளில் தமிழ் கட்டாயம்- மசோதா தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் கல்வியாண்டிலிருந்து பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்றுசட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இது தொடர்பான மசோதாவை இன்று தாக்கல்செய்தார். அதில்,வரும் கல்வியாண்டிலிருந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் தமிழைக்கட்டாயப் பாடமாக பயில்வது உறுதி செய்யப்படும்.
2006-2007ம் கல்வி ஆண்டிலிருந்து மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை தமிழை கட்டாயப் பாடமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ், ஆங்கிலம் ஆகியவை கட்டாய பாடங்களாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications