மோசடி மன்னன் ஆதிகேசவன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
![]() |
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஆதி கேசவன். நடமாடும் நகைக் கடையாகவலம் வந்த ஆதிகேசவன் ஒரு நாள் போலீஸில் சிக்கினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறிநூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை கமிஷனாகப் பெற்றுமோசடி செய்ததாக ஆதிகேசவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது 50க்கும்மேற்பட்டோர் புகார் கொடுத்தனர்.
ஆதியை சிறையில் அடைத்த போலீஸார் அவர் மீது 38 வழக்குகளைப் பதிவுசெய்தனர். அவர் தவிர மகன், அண்ணன் மகன் உள்பட மேலும் 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்குகள் தவிர குண்டர் சட்டத்தின் கீழும் ஆதி உள்ளே தள்ளப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் தன்னைக் கைது செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை ஆதி அணுகினார். அங்கு அவரது கோரிக்கை ஏற்கப்பட்டுகாவல்துறையின் நடவடிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் மற்ற வழக்குகளில் ஜாமீன் பெற ஆதி தரப்பு விரைவான நடவடிக்கையைஎடுத்தது.
38 வழக்குகளிலும் ஆதியை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி அவரதுவழக்கறிஞர்கள் சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி கணேசன், அனைத்துவழக்குகளிலும் ஆதிக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
தலா ரூ. 1 லட்சம் மற்றும் இரு நபர் பிணையத்தின் பெயரில் அவருக்கு ஜாமீன்வழங்கப்பட்டது.
இதன் மூலம் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து விட்டதால் சிறையிலிருந்துவிடுவிக்கப்பட்டார் ஆதி.
தற்போது அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சிறுநீரக கோளாறு காரணமாகசிகிச்சை எடுத்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications