சனிக்கிழமை மாலை.. மீண்டும் கண்ணகி சிலை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதேஇடத்தில் சனிக்கிழமை மாலை நிறுவப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகிசிலையை திடீரென இரவோடு இரவாக அகற்றப்பட்டது.சிலை இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு படு வேகமாக அந்த இடத்தில்சாலையும் போடப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் அதேசிலை மீண்டும்நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் குப்பை போடும் அறையில் கேட்பாரற்றுக் கிடந்தகண்ணகி சிலையை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டு அதை செப்பனிடச் செய்தார்.
இந் நிலையில் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி மாலை கண்ணகிசிலை மீண்டும் நிறுவப்படவுள்ளது. சிலையை கருணாநிதி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications