செரீனா..1.4 கோடி பணம்..ஜமீன் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Serina
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனின் நெருங்கிய தோழியான ஜனனி ன்ெறசெரீனாவிடம் கைப்பற்றப்பட்ட பணம் ரூ.1.40 கோடி பணம் தனக்குச் சொந்தமானது என்று மதுரை நீதிமன்றத்தில்கடம்பூர் ஜமீன்தார் வாக்குமூலம் அளித்தார்.

மதுரை தாசில்தார் நகர் அன்பு நகரை சேர்ந்த செரீனா, இவரது தாயார் ரெனிஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ்ஆகியோரை கஞ்சா வைத்திருந்தாக கடந்த 2003 ம் ஆண்டு கைது செய்யதனர். நடராஜனுக்கு நெருக்கமாகஇருந்ததால் இந்த வம்பில் மாட்டினார் செரீனா என்ற ஜனனி.

பின்பு இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை போதை பொருள் கடத்தல் தடுப்புபிரிவு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது.

இந் நிலையில் நெல்லையில் உள்ள கடம்பூரை சேர்ந்த ஜமீன்தார் ஜெகதீச ராஜா, செரீனாவிடம் இருந்ததுகைப்பற்றப்பட்ட பணம் தனக்கு சொந்தமானது. அதை என்னிடம் திருப்பி ஒப்படைக்குமாறு மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனு நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜமீன்தாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் தந்தார். அதன் விவரம்:

நான் ஒரு நில புரோக்கர். நிலம் வாங்கி விற்க்கும் தொழிலை பெரிய அளவில் செய்து வருகிறேன். டெல்லியைசேர்ந்த ஏ.எப் நிறுவனத்தினர் என்னிடம் தொடர்பு கொண்டு நிலம் வாங்க வேண்டும் என்றார். இதில் அந்தநிறுவனத்தின் ஆடிட்டர் ரவி சோப்ராவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ரவி சோப்ராவுக்கும் இந்தி, ஆங்கில மொழிகள் மட்டுமே தெரியும் எனக்கு ஆங்கிலத்தில் கொஞ்சம் தான்தெரியும். இதனால் இந்தி, ஆங்கில மொழிகள் தெரிந்தவர்கள் எனக்கு தேவைப்பட்டது.

அப்பொழுது தான் சென்னையில் வசித்து வந்த செரீனாவின் தந்தை ஞபாகத்துக்கு வந்தார். செரீனாவின்தந்தைக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் செரீனாவின் வீட்டில் வைத்து வியாபாரவிஷயங்களை பேசினேன்.

அதற்கு உதவியாக செரீனா இருந்தார். ரவி சோப்ரா தனக்கு 1,500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது என்றார்.அதற்கு அவரிடம் ரூ. 6.30 கோடி செலவாகும் என்றும், முன் பணமாக 25 சதவீதத்தைத் தர வேண்டும் என்றும்கூறினேன்.

ரவி சோப்ராவும் அதன்படி ரூ. 1.40 கோடி தர ஒப்புக்கொண்டார். அந்த பணத்தை என் டெல்லி நண்பர் அதுல்என்பவரிடம் ரவிசோப்ரா கொடுத்து அனுப்பினர்.

அப்பணத்தை பெற்ற கொள்ள அதுல் என்னை சென்னைக்கு அழைத்தார். அன்று எனது திருமண நாளாகஇருந்தால் என்னால் அங்கு போக இயலவில்லை. எனவே பணத்தை செரீனாவிடம் கொடுக்குமாறு அவரிடம்கூறினேன்.

அதனால் அவர் பணத்தை செரீனாவிடம் கொடுத்து சென்றார். பிறகு எனக்கு பணம் தேவைப்பட்டதால்செரீனாவிடம் தொடர்பு கொண்டு அவரிடம் இருக்கும் பணத்தில் ரூ.40 லட்சம் எடுத்துக்கொண்டு நெல்லைவருமாறு கூறினேன்.

செரீனாவும் பணத்துடன் நெல்லை வந்துகொண்டு இருக்கும் போதுதான் போலீசார் செரீனாவை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்த ரூ.40 லட்சத்தையும், அவர் வீட்டில் இருந்த ரூ.1 கோடி பணத்தையும் பறிமுதல்செய்தனர்.

செரீனாவிடம் இருந்து போலீசார் கைப்பற்றியது என்னுடைய பணம். அதை என்னிடமே ஒப்படைக்க கோரிகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் என ஜெகதீசராஜா சாட்சியம் அளித்தார்.

பின்னர் ஜெகதீசராஜாவிடம் வருமானவரித்துறை சார்பாக ஆஜரான வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

அதன் விபரம் வருமாறு:

கேள்வி: நிலங்களை வாங்கி விற்றதில் முறையான கணக்குகள் வைத்துள்ளீர்களா?

பதில்: ஆம், வைத்துள்ளேன்.

கேள்வி: அதற்கு வருமான வரி செலுத்தி உள்ளீர்களா?

பதில்: ஆம், செலுத்தி வருகிறேன்.

கேள்வி: செரீனாவிடம் இருந்து கைப்பற்ற பணம் உங்களுடையது அல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: அந்த பணம் என்னுடையது தான்.

கேள்வி: செரீனாவிடம் இருந்த பணம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்: இல்லை

பின்பு செரீனாவின் வக்கீலும் ஜமீன்தார் ஜெகதீசராஜாவிடம் குறுக்கு விசாரணை செய்தார். பின்னர் இந்த வழக்குமீதான விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+