கலர் டிவி-நகராட்சி, ஊராட்சி குழுக்கள் அமைப்பு
சென்னை:
ஏழை மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்குவது தொடர்பான திட்டத்தைசெயல்படுத்துவது தொடர்பாக ஊராட்சி மற்றும் நகர அளவில் குழுக்களை அமைக்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய வாக்குறுதி இலவச கலர்டிவி திட்டம். இந்தத் திட்டம் இந்த ஆண்டு அண்ணா மற்றும் பெரியார் பிறந்த நாள்முதலே அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார்.இந் நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஊராட்சித் துறை அமைச்சர்ஸ்டாலின், திட்டக் குழுத் துணைத் தலைவர் நாகநாதன் மற்றும் அதிகாரிகளுடன் கலர்டிவி திட்டம் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இக் கூட்டத்தில் கலர் டிவியை எப்படி வழங்குவது என்பது குறித்துஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி கலர் டிவி திட்டத்தை அமல்படுத்த ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிஅளவில் குழுக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஊராட்சி அளவில் அமைக்கப்படும் குழுக்களில் ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாகஅதிகாரி, அப் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோர் இடம் பெறுவர்.
மாநகரங்கள், நகரங்கள் மற்றும் சிறப்பு ஊராட்சிகளில் கவுன்சிலர்கள், பில்கலெக்டர்கள், வருவாய் அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். இந்தக் குழுக்களை உடனடியாக அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் கலர் டிவி திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்துஒரு வாரத்திற்குள் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்கள் தாக்கல் செய்யும் அறிக்கைகளை தலைமைச் செயலாளர்தலைமையில் அமையவுள்ள குழு ஆய்வு செய்து அரசிடம அறிக்கை சமர்ப்பிக்கும்.
அதன் பின்னர் உலகளாவிய டெண்டர் விடப்பட்டு கலர் டிவிக்கள் வாங்கப்பட்டுவினியோகிக்கப்படும். இந்தப் பணியை கண்காணிக்க அனைத்துக் கட்சிகளின்பிரதிநிதிகள் அடங்கிய குழு பின்னர் அமைக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications