புலிகள், இலங்கை அரசு குழு நார்வே பயணம்
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின்தலைவர் உல்ப் ஹென்றிசன் கிளிநொச்சியில் சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் தமிழ்ச் செல்வன் கூறியதாவது:கண்காணிப்புக் குழு தலைவர் எங்களையும் மக்களையும் சந்தித்து பேசியிருக்கிறார். போர் நிறுத்த உடன்பாடுதொடர்பாகவும் கண்காணிப்புக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அவருடன் பேசினோம்.
ஜரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையையடுத்து அமைதி முயற்சிகள், கண்காணிப்புக் குழுவின்செயல்பாடுகள் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் எங்கள்தலைமை தீவிரமாக பரிசீலிக்க இருக்கிறது.
அதன் பின்பு கண்காணிப்புக் குழுவினரை மீண்டும் தொடர்பு கொள்வோம்.
இது குறித்துப் பேச நார்வே நாடும் அழைத்துள்ளது. அந்த அழைப்பை எங்கள் தலைமை சாதகமாக பரிசீலிக்கும்.ஓஸ்லோவில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு இலங்கை அரசும் அழைக்கப்பட்டிருந்தாலும் அது இதுபேச்சுவார்த்தை அல்ல. இருதரப்பும் சந்திதத்து பேச ஒஸ்லோவுக்குச் செல்லவில்லை.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவே பேச அழைத்துள்ளது நார்வே. ஐரோப்பிய யூனியன் தடைக்கு பின்எழுந்திருக்கும் நெருக்கடியான நிலைமை தொடர்பாக நார்வேவுக்கும் அமைதி கண்காணிப்பாளர்களுக்கும்தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த அடிப்படையில் தான் இந்தப் பயணம் அமையும்.
ஜரோப்பிய யூனியன் தடை அமைதி கண்காணிப்பாளர்களுக்கும் நிச்சியமாக பாதிப்பை ஏற்படுத்தும். ஓஸ்லோசெல்வதாக இருந்தால் எங்கள் தரப்பினருக்கு முழுமையாக பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குகள்அனைத்துக்கும் நார்வே தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை கூறியிருக்கின்றோம். அதை உறுதிப்படுத்தியபின்னர் தான் பயணம் அமையும்.
ஜரோப்பிய யூனியன் இலங்கை அரசு பற்றியும் சமாதான விரோதப் போக்கு பற்றியும் அறிக்கையில் கூறியுள்ளவிஷயங்கள் உண்மைக்கு மாறானவை அல்ல. இருந்தாலும் அரசின் பயங்கரவாத்தை எப்படி தடுக்கலாம்?பயங்கரவாத அரசை எவ்வாறு கையாளலாம் என்பதி பற்றி சர்வதேச சமூகம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய நிலை குறித்துத் தான் அந்த அறிக்கையின் வெளிப்பாடு இருக்கின்றது.
அந்த வகையில் விடுதலைப் புலிகள் மீது போடப்படும் அழுத்தத்துக்கு இணையாக இலங்கை அரசும் மீதும்அழுத்தத்தைப் போட வேண்டிய நிலையில் உலக சமுதாயம் உள்ளது.
ஜரோப்பிய யூனியன் தடை எந்த விதமான பயங்கரவாதத்தையும் தமிழர்கள் மீது ஏவிவிடலாம் என்ற துணிவைசிங்கள அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடை தமிழர்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications