புலிகளுடன் அதிகாரப் பகிர்வுக்கு தயாராகிறது இலங்கை அரசு?
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் அதிகாரப் பகிர்வு தொடர்பான புதிய முயற்சி ஒன்றைஅதிபர் ராஜபக்ஷே மேற்கொண்டுள்ளார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக முடிவுகளை எடுக்க அனைத்துக்கட்சியினர் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.ஆனால், இதில் 4 முக்கிய தமிழர் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டணிஇடம் பெறவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளபின்னணியில், விடுதலைப்புலிகளும், இலங்கை அரசுக் குழுவும் ஜூன் 8 மற்றும் 9ஆகிய தேதிகளில் நார்வேயுடன் ஓஸ்லோவில் பேசவுள்ளன.
இவை அமைதிப் பேச்சு இல்லை என்றாலும் கூட நார்வேயில் நடக்கும் இக் கூட்டம்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந் நிலையில், சர்வதேச நெருக்கடி காரணமாக இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண புதிய முயற்சியில் அதிபர் ராஜபக்ஷே இறங்கியுள்ளார்.
கொழும்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை ராஜபக்ஷே கூட்டி ஆலோசனைநடத்தினார். இக்கூட்டம் குறித்து அதிபரின் உதவியாளர் அஜீத் நிவாரத் கப்ரால்கூறுகையில்,
இலங்கையில் உள்ள அனைத்து முக்கியக் கட்சிகளிலிருந்தும் ஒரு பிரதிநிதியைக்கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.
இந்தக் குழு, இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான வழி வகைகளை,
இலங்கை அரசின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, விடுதலைப் புலிகளுடன்அதிகாரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அரசுக்கு யோசனை தெரிவிக்கும்.
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவுதெரியும் வரை இந்த அனைத்துக் கட்சிக் குழு எந்த இறுதி முடிவையும் எடுக்காதுஎன்று அவர் தெரிவித்துள்ளார்.
இது போல திட்டங்களைப் போடுவது, குழுக்களை அமைப்பது இலங்கை அரசுக்குபுதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கொடுத்த உறுதிமொழிகளை இலங்கை அரசுபலமுறை மீறியதால் தான் பிரச்சனை இவ்வளவு சிக்கலானது.
இதனால் இந்த அனைத்துக் கட்சிக் குழு அமைப்பு கூட சர்வதேச சமுதாயத்தின்நெருக்குதலில் இருந்து தப்புவதற்கும் திசை திருப்பவும் இலங்கை மேற்கொள்ளும்திட்டமா அல்லது உண்மையான அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் முயற்சிஎன்பதை காலம் தான் பதில் சொல்ல முடியும்.
அதிபரின் இந்த புதிய திட்டம் குறித்து விடுதலைப் புலிகள் கருத்து எதையும்தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து விடுதலைப் புலிகளின் பத்திரிகை தொடர்பாளர் தயா மாஸ்டர்கிளிநொச்சியிலிருந்து தொலைபேசி மூலம் பேசுகையில்,
ஓஸ்லோவில் நடைபெறும் பேச்சுக்கள் குறித்தே நாங்கள் அக்கறையாக உள்ளோம்.அந்தப் பேச்சுவார்த்தையை அமைதிப் பேச்சுவார்த்தையாக நாங்கள் கருதவில்லை.போர் நிறுத்த கண்காணிப்பு, பாதுகாப்பு குறித்து முக்கியமாக பேசுவோம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடை குறித்தஎங்களது தலைவரின் கருத்தை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவும் நாடுகள்,நிதியுதவி செய்யும் நாடுகள், நார்வே ஆகியோருக்கு எடுத்துரைப்போம்.
அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் நாங்கள் தெளிவாக சொல்லவுள்ளோம் என்றார்.
ஓஸ்லோ பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக விடுதலைப் புலிகள் குழுஞாயிற்றுக்கிழமை அங்கு செல்கிறது.
கடந்த பிப்ரவரியில் விடுதலைப் புலிகள், இலங்கை அரசுக்கு இடையிலான போர்ஒப்பந்தம் மீறப்பட்டு இரு தரப்பும் பரஸ்பரம் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தன.
அதிலிருந்து இன்று வரை ராணுவ வீரர்கள், கடறபடை வீரர்கள், போலீஸார்,அப்பாவிப் பொதுமக்கள், போராளிகள் என மொத்தம் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் புலிகள் ஊடுறுவல் இல்லை:
இந் நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுறுவல் ஏதும்இல்லை என்று மத்திய மண்டல காவல்துறை ஐஜி ஜாபர் சேட் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய மண்டலத்திற்குட்பட்டமுக்கிய இடங்களில் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள்ஊடுறுவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட கடலோரப் பகுதிகளில் தீவிர போலீஸ் கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை விடுதலைப் புலிகள் யாரும் இங்குஊடுறுவவில்லை என்றார் சேட்.ஒரே நாளில் 207 அகதிகள் வருகை:
இதற்கிடையே இன்று ஒரே நாளில் இலங்கையிலிருந்து 207 தமிழர்கள் அகதிகளாகவந்துள்ளனர்.
திரிகோணமலை, பாளையூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 57குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் இன்று காலை தனுஷ்கோடி மற்றும்ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார் பின்னர் மண்டபம் முகாமுக்குஅவர்களை அனுப்பி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications