ராகுல் மகாஜனை மயக்கியது கொகைன்-விஷமும்இல்லை, சதியும் இல்லை: வண்டவாளம் வெளிவந்தது
டெல்லி:
மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல் கொகைன் போதை மருந்தை அதிக அளவில்நுகர்ந்ததால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சமீபத்தில் பாஜகவில் சேர்க்கப்பட்ட ராகுல் மகாஜன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் நேற்று அதிகாலைமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அவரது உதவியாளர்விவேக் மொய்த்ரா முறையில் இறந்தார்.இருவரும் உண்ட உணவு விஷமாகிவிட்டதாகவும், இதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் முதலில்தகவல்கள் வந்தன.
ஆனால், இந்த இருவரும் முழு அளவில் தண்ணி அடித்துவிட்டு கொகைன் போதை மருந்தை அளவுக்குஅதிகமாக நுகர்ந்துள்ளனர். இதையடுத்தே உதவியாளர் மொய்த்ரா விட்டு வாயில் நுரை தள்ளி இறந்தார். ராகுல்மகாஜன் மயக்கமடைந்தார்.
முன்னதாக இந்த இருவரையும் அவர்களது நண்பர்களாக கரண், ராகுல் மல்ஹோத்ரா, திசேய், சகைல் ஆகிய 4பேர் சந்திக்க வந்துள்ளனர். இவர்கள் மொய்த்ராவுக்கு பழக்கமானவர்கள். ஒரு டீல் விஷயமாக இவர்கள் சந்திக்கவந்துள்ளனர்.
அப்போது, எங்களுக்கு உடனடியாக போதை மருந்து வேண்டும் என்று மொய்த்ராவும் ராகுல் மகாஜனும் இந்தநால்வரிடமும் கூறியுள்ளனர். அதை வாங்கி வர ரூ. 15,000த்தைத் தந்துள்ளனர். போதை மருந்து எங்குகிடைக்கும் என்ற விவரத்தையும் சொல்லி அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து அந்த நால்வரும் கொகைகன் போதை மருந்தை வாங்கச் சென்றுள்ளனர். ஆனால், ராகுல்மல்ஹோத்ரா, எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. நான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லி வழியில்இறங்கிக் கொண்டுள்ளார். இதைடுத்து மற்ற மூவரும் கிரேட்டர் கைலாஷ் பகுதிக்குச் சென்று போதை மருந்தைவாங்கிக் கொண்டு வந்தனர்.
அந்த போதை மருந்தை, 500 ரூபாய் நோட்டை சுருட்டி மூக்கில் வைத்து ராகுல் மகாஜனும் மொய்த்ராவும்இழுந்துள்ளனர். அதற்கு முன் இருவரும் நன்றாக குடித்துள்ளனர்.
போதை மருந்தை உள்ளே இழுத்த சிறிது நேரத்தில் மொய்த்ரா வாயில் நுரை தள்ளி மயங்கியுள்ளார். அடுத்ததாகராகுலும் மயங்கி விழுந்தார்.
இதையடுத்தே அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆனால்,வழியிலேயே மொய்த்ரா இறந்துவிட்டார். கவலைக்கிடமான நிலையில் ஐசியுவில் இருந்த ராகுலின் உடல் நிலைதேறி வருகிறது
இச் சம்பவத்தையடுத்து நேற்று இரவே அந்த நண்பர்களில் 3 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டனர்.
டெல்லி சப்தர்ஜங் ரோட்டில் பிரமோத் மகாஜனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவில் இச் சம்பவம் நடந்தது. அந்தவீட்டை ராகுல் மகாஜன் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
இந்த மொய்த்ரா முன்பு பிரமோத் மாகாஜனிடம் 15 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர். திருமணமாகாதவர்.குடி, போதை, உயர் மட்ட தொடர்புகள், பணம் என உயர் தட்டு வாழ்வில் திளைத்தவர். இப்போது பிரமோத்தின்மகன் ராகுலுக்கும் உதவியாளராக இருந்தார்.
ராகுலை பிரமோத் லண்டனில் படிக்க வைத்தபோதே அவருக்கு போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்துஅவரை இந்தியா கொண்டு வந்துவிட்ட குடும்பத்தினர், அவரை பைலட் ஆக்கினர். அவரும் ஜெட் ஏர்வேசில்சேர்ந்தார். ஆனால், அவரால் சரியான முறையில் விமானங்களை இயக்க முடியவில்லை என்பதால் பணியைவிட்டு நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு ஒரு டிவி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தை வைத்துத் தந்தார் பிரமோத். அதில்தயாரிக்கப்பட்ட தொடர்கள் தூர்தர்ஷனில் மட்டும் ஒளிபரப்பாயின. ராகுலுக்கும் பெரிய அளவில் பணம்கிடைத்தது. ஆனால், தொடர்களின் தரம் சரியில்லாததால் பிற தொலைக்காட்சிகள் அவரிடம் எந்ததயாரிப்புகளையும் வாங்கவில்லை. இதையடுத்து அதுவும் இழுத்து மூடப்பட்டது.
பின்னர் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை வைத்துத் தந்தார் பிரமோத். அந்த நிறுவனம் இழுத்துப் பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
தந்தையின் அரசியல் அதிகாரத்தால் ராகலால் பைலட் வேலையில் சேர முடிந்திருக்கிறது. ஆனால், அதில் நீடிக்கமுடியவில்லை. அதே போல தொலைக்காட்சித் தொடர்களை ராகுலிடம் தூர்தர்சன் வாங்கியபோது நடந்ததுபாஜக ஆட்சி. அதிலும் அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
26 வயதே ஆன ராகுலை பிரமோத் மகாஜனின் மறைவைத் தொடர்ந்து கடந்த வாரம் தான் கட்சியில் சேர்த்ததுபாஜக தலைமை. இந் நிலையில் அவரது வண்டவாளம் வெளியில் வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications