உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி-விஜயகாந்த் சூசகம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுடன் சில கட்சிகள் கூட்டணி அமைக்கும் வாய்ப்புஉள்ளதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிகவுக்குவிருத்தாச்சலம் தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றுவிஜயகாந்த்தை தேமுதிகவினர் வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாகவிஜயகாந்த் கூறுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது மற்ற கட்சிகளுடன்கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
சில கட்சிகளுடன் எங்களது கட்சி கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதைமுழுமையாக மறுக்க முடியாது. இருப்பினும் என்னைத் தேர்ந்தெடுத்த மக்கள் என்னவிரும்புகிறார்களோ, அதன் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படும்.
கட்சித் தொண்டர்களிடம் விரிவான ஆலோசனை நடத்தி வருகிறேன்.
இந்த ஆலோசனையின் அடிப்படையில் பொதுக் குழுக் கூட்டத்தில் விவாதம் நடத்திஇறுதி முடிவு எடுப்போம்.
எனவே தனித்துப் போட்டியா, கூட்டணியா என்பது செப்டம்பர் இறுதிக்குள் தெரிந்துவிடும்.
தினமும் நிறையப் பேர் கட்சியில் இணைந்தவண்ணம் உள்ளனர். திமுக, அதிமுக,காங்கிரஸ், பாஜக, மதிமுக என முக்கியக் கட்சிகள் அனைத்திலிருந்தும் ஏராளமானபேர் இணைந்தபடி உள்ளனர்.
கட்சியை பலப்படுத்துவதே இப்போதைய எனது முக்கிய வேலை.
சட்டசபைக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால்அதிமுகவும், திமுகவும் ஒருவர் திட்டத்தை மற்றவர் முடக்குவதில்தான் கவனம்செலுத்துகிறார்கள், நேரத்தை செலவழிக்கிறார்கள்.
எனவே மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றால் மட்டுமே இனிமேல் சட்டசபைக்கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவுள்ளேன்.
திமுகவும், அதிமுகவும தொடர்ந்து தவறு செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கிடையிலான பனிப்போர் இன்னும் நீடிக்கிறது. மக்களுக்காக அவர்கள்நேரத்தை செலவழிக்க முன் வரவில்லை. இந் நிலையில் நான் வெறும்பார்வையாளனாகத்தான் இருக்க முடிகிறது.
அவர்கள் இருவரும் அடித்துக் கொண்டிருக்கும்போது நான் எப்படி குறுக்கிட்டுப் பேசமுடியும்? முதலில் ஆளுங்கட்சிக்காரர்கள் மேசையைத் தட்டுவதை நிறுத்த வேண்டும்.இல்லாவிட்டால் மற்ற கட்சிக்காரர்கள் கோபம் அடையும் சூழ்நிலைதான் ஏற்படும்.
விருத்த்தாச்சலம் தொகுதியில் கல்வி அறிவற்றோர் அதிகம் உள்ளனர். தார் ரோடுவசதி கூட இல்லை. இவற்றில் எல்லாம் நான் தீவிர கவனம் செலுத்தவுள்ளேன்.
சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன், ஆனால் ஆண்டுக்கு ஒரு படம்தான் நடிப்பேன்என்றார் விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications