ராகுல் மகாஜன் விவகாரம்: கைகழுவியது பாஜக!
புதுடெல்லி:
போதைப் பொருளைஅதிக அளவில் உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்போராடிக் கொண்டிருக்கும் மறைந்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜனின் மகன்ராகுல் மகாஜன் விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த பங்கும் இல்லை, இது முற்றிலும்மகாஜன் குடும்பம் சம்பந்தப்பட்டது என்று பாஜக அறிவித்துள்ளது.
பிரமோத் மகாஜனின் செயலாளர் மைத்ரா மற்றும் மகாஜனின் மகன் ராகுல் மகாஜன்ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். இதில் மைத்ரா உயிரிழந்தார். மகாஜன் உயிருக்கு ஆபத்தானநிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இருவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால்கொக்கைன் என்ற போதைப் பொருளை மதுவுடன் கலந்து சாப்பிட்டதால்தான்இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் மகாஜப்ை பரிசோதித்த டாக்டர்கள், அவரது ரத்தத்தில் போதைப் பொருள்எதுவும் கலந்திருக்கவில்லை என்று முதலில் தெரிவித்தனர்.
ஆனால் தங்களது முடிவை பின்னர் மாற்றிக் கொண்ட டாக்டர்கள், மகாஜன் மற்றும்மைத்ராவின் ரத்தத்தில் போதைப் பொருள் கலந்திருப்பதை உறுதி செய்தனர். இதனால்ராகுல் மகாஜனும், மைத்ராவும் போதைப் பொருள் சாப்பிட்டிருப்பது உறுதியானது.
இந்த நிலையில் ராகுல் மகாஜனுடன் மது மற்றும் போதைப் பொருள் உட்கொண்டதாகபோலீஸாரால் தேடப்பட்டு வந்த அவரது மூன்று நண்பர்களான கரன், திரிஷய், ராகுல்ஆகியோர் போலீஸில் சரணடைந்தனர்.
தங்களுக்கு ஷாகில் ஸரூ என்பவர்தான் போதைப் பொருளை கொடுத்ததாகபோலீஸில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்தப் போதைப் பொருளை ஷாகில் ரூ. 15,000க்கு வாங்கி வந்ததாக தற்போதுதகவல் வெளியாகியுள்ளது. போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஷாகில் ஸ்ரீநகரில்போலீஸாரால் கைது செய்யபபட்டுள்ளார்.
போலீஸாரிடம் ஷாகில் கொடுத்த வாக்குமூலத்தில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
ஷாகில் கொடுத்த வாக்குமூலத்தில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில் ஷாகில் கூறியிருப்பதாவது:
நான் மட்டும் போதைப் பொருளை உட்கொள்வதற்காகவே அதை ரூ. 15,000கொடுத்து வாங்கி வந்தேன். மைத்ராவை எனக்கு முன்பே நன்கு தெரியும். அவர்தான்மகாஜன் வீட்டுக்கு என்னை வருமாறு கூறினார்.
அங்கு வைத்து நான் கொக்கைனை உட்கொண்டேன். அப்போது மகாஜன் மற்றும்மைத்ராவும் அதை எடுத்து பயன்படுத்தினர். இருவரும் சில விநாடிகளில்மயக்கமடைந்து விழுந்தனர். எனக்கும் லேசான மயக்கம் வந்தது.
இதையடுத்து அங்கிருந்து நான் கிளம்பி விட்டேன். நேராக ஒரு மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
நான் போதைப் பொருளை விற்பனை செய்பவன் அல்ல. எதேச்சையாகதான் அதைவாங்கினேன்.
நான் பயன்படுத்துவதறகாகத்தான் அதை வாங்கி வந்தேன். ஆனால் நான் தவறானஇடத்திற்கு, தவறான நேரத்தில் போய் விட்டேன். அதுதான் இப்போது தப்பாகிவிட்டது என்று ஷாகில் கூறியுள்ளார்.
ஷாகிலின் வாக்குமூலத்தின் மூலம் ராகுல் மகாஜன், மைத்ரா ஆகியோர் போதைப்பொருளை உட்கொண்டதால்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே ராகுல் மகாஜன் விவகாரத்தில் பாஜகவின் பெயர் கெட்டு விடக் கூடாதுஎன்பதில் பாஜக தீவிர அக்கறை செலுத்துகிறது. முதலில் மகாஜனுக்கு விஷம்கொடுக்கப்பட்டதாக கூறி வந்த பாஜக தற்போது இந்த விவகாரத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானியை சந்தித்து விவாதித்தனர்.அதன் பின்னர் மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,மகாஜன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சோகம் இது.
இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது. இது எந்தக் குடும்பத்திற்கும்நேரக் கூடிய ஒரு ஆபத்துதான். இதை அவர்கள் சமாளித்து மீள்வார்கள் என்றார்சுஷ்மா.
இது முழுக்க முழுக்க மகாஜன் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதில் பாஜகவின்பங்கு ஏதும் இல்லை, தொடர்பு இல்லை என்று பாஜக கூறி விட்டதால், மகாஜன்விவகாரம் மூலம் கட்சியின் பெயர் கெட்டு விடக் கூடாது என்பதில் அக்கட்சிகவனமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications