1.5 கோடி பேருக்கு இலவச டிவி
திருச்சி:
அண்ணா பிறந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழகத்தில் இலவச டிவி வழங்கும்பணி தொடங்கும். 1.5 கோடி பேருக்கு இலவசமாக டிவி வழங்கப்படும் என்று தமிழகபோக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் நேர வாக்குறுதிகளைசொன்னபடி நிறைவேற்றத் தொடங்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. அதில் க்கியமானவாக்குறுதி 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம்.அடுத்த முக்கியமான வாக்குறுதியான இலவச கலர் டிவி செப்டம்பர் 15ம் தேதிஅண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படவுள்ளது.
குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்களைக் கணக்கெடுத்து அதன் அடிப்படையில்டிவி வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது 1.84 கோடி பேரிடம் குடும்ப அட்டைஉள்ளது. அதில் வசதி படைத்தவர்கள் தவிர கிட்டத்தட்ட 1.5 கோடி பேருக்கு இலவசடிவி வழங்கப்படும் என்றார் நேரு.
60 வாக்குறுதிகள் ஓவர் என்கிறார் அமைச்சர்:
இதற்கிடையே கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமிழக பிற்பட்டோர் நலத் துறைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாகவே புதியகூட்டுறவுக் கடன்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதை அரசு பரிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.
விவசாயிகளின் விருப்பப்படி முன்கூட்டியே கடனை வழங்க நடவடிக்கைஎடுப்போம். விரைவில் கடன் தரப்படும். இதன் மூலம் விவசாயிகள் தங்களதுசாகுபடிப் பணிகளை முன்கூட்டியே தொடங்க முடியும்.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, கடன் தொகை நிலுவைஇல்லை என்ற சான்றிதழ் வழங்கப்படும். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்துவிவசாயிகளுக்கும் இந்த சான்றிதழ் வழங்கப்படும்.
கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ. 220 கோடி அளவுக்கு கூட்டுறவுக் கடன்கள்தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் பதவியேற்ற சில நாட்களிலேயே 60 வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதிநிறைவேற்றி விட்டார். மீதமுள்ள 60 வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றிமுடிப்பார் என்றார் பன்னீர் செல்வம்.
துரைமுருகன் ஆஹா.. ஓஹோ..:
சொன்னதை செய்ய மாட்டார்கள் அரசியல்வாதிகள் என்ற அவப் பெயரை, 2ரூபாய்க்கு அரிசித் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி களைந்து விட்டார் முதல்வர்கருணாநிதி என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூரில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசித் திட்டத்தைத் தொடங்கி வைத்த துரைமுருகன்பேசுகையில், அரசியல்வாதிகள் சொல்வதை செய்ய மாட்டார்கள், பொய்சொல்பவர்கள் என்ற அவப் பெயர் உள்ளது. அதை இப்போது துடைத்தெறிந்து,பொய்யாக்கி விட்டார் கருணாநிதி.
சொன்னதோடு நில்லாமல், 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தைத்தொடங்கியுள்ளார். முதல்வராகப் பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே தான்சொன்ன வாக்குறுதிகளில் 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி கோப்பில்கையெழுத்துப்போட்டு சாதனை படைத்தார்.
கடந்த திமுக ஆட்சியில்தான் ரேஷன் அரிசி விலை ரூ. 3.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.அதன் பின்னர் வந்த அதிமுக அரசு அதை 9 ரூபாய் ஆக உயர்த்தியது. ஆனால்ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் வருவதற்கு முன்பு மீண்டும் 3.50 ஆக குறைத்தது.
அதேசமயம் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு 6 ரூபாய்க்கு அரிசிவழங்கினார்கள். 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டத்தினால் வேலூர் மாவட்டத்தில்மட்டும் ரூ. 32 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படும்.
அதேபோல, விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடியால் வேலூர் மாவட்டத்தில்மட்டும் ரூ. 343 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். ஆனால் இதை சமாளிப்போம்என்றார் துரைமுருகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications