போலீஸ் பாதுகாப்புடன் நிர்வாண சாமியார்களின் நடைபயணம்!
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு நிர்வாணமாக நடைபயணம் மேற்கொண்டஐந்து ஜைன மத துறவிகளுக்கு மேட்டூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்துஅவர்களைச் சுற்றிலும் துணிகளை வைத்து மறைத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன்கர்நாடகத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் துறவி உள்ளிட்ட ஐந்து ஜைன மததுறவிகள், ஆச்சார்யா தேவசேனா என்ற துறவியின் தலைமையில்சிரவணபெலகொலாவில் நடந்த மகாமஷ்டாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அதைத் தொடர்ந்து நிர்வாண கோலத்தில் அவர்கள் மைசூர் அருகே உள்ள திருமலைஎன்ற இடத்திற்கு நடைபயணமாக வந்தனர். அங்கு பக்தர்களுக்கு ஆசி கொடுத்தபின்னர் தமிழக எல்லையில் உள்ள ஹரிஹந்தகிரி என்ற இடத்திற்கு நடைபயணமாகவந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து அவர்கள் மேட்டூரில் உள்ள மகாவீர் இன்டஸ்ட்ரீஸ் என்றதொழிற்சாலைக்கு வந்து தங்கினர். அங்கிருந்துபடி பக்தர்களுக்கு ஆசி வழங்கிவந்தனர்.
பெண் துறவிகள் உள்ளிட்ட ஐந்து துறவிகள் நிர்வாண கோலத்தில் நடைபயணம்மேற்கொண்டிருப்பதையும், பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவதையும் கேள்விப்பட்டதந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த ஏராளமான பேர் அந்தத்தொழிற்சாலைக்கு சென்று முற்றுகையிட்டனர்.
துறவிகள் நிர்வாணமாக நடைபயணம் மேற்கொள்ள அவர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இவர்களது எதிர்ப்பு காரணமாக துறவிகளால் வெளியே வரமுடியவில்லை.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து துறவிகள்மற்றும் திராவிடர் கழகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், மைசூரிலிருந்து விரைந்து வந்த ஜைன மத துறவி புவனகீர்த்தி பட்டாரக சுவாமியும் கலந்து கொண்டார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் சுற்றிலும் துணிகளை வைத்து மறைத்த நிலையில்,துறவிகள் நடைபயணம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐந்துதுறவிகளையும் சுற்றி மஞ்சள் துணியால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் துறவிகள் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் தமிழக, கர்நாடகமாநில எல்லையில் உள்ள பாலாறு என்ற இடத்திற்கு நடைபயணமாக சென்றுசேர்ந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் வழக்கம் போல துணி மறைவை எடுத்து விட்டுகர்நாடகத்திற்குள் நடைபயணத்தை மேற்கொண்டு மைசூர் அருகே உள்ள சாம்ராஜ்நகர் ஜைன மடத்திற்கு சென்றனர்.
பெண் உள்ளிட்ட 5 ஜைன துறவிகள் நிர்வாண நடைபயணம் மேற்கொண்டது மேட்டூர்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications