இலங்கை தமிழர் துயரம்-திமுக மீது பாஜக புகார்
சென்னை:
இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து பலியாகி வருவது குறித்து திமுக அரசு மெளனம்காத்து வருவதற்கு தமிழக பாஜக செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக செயற்குழுக் கூட்டம் கடந்த 2 நாட்களாக சென்னையில் நடந்தது. அதில்சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த பெரும் தோல்வி குறித்துவிவாதிக்கப்பட்டது.இறுதியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குவந்துள்ளனர். தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர். இலங்கையில் தமிழர்களைராணுவத்தினரும், சிங்களர்களும் தேடித் தேடிக் கொலை செய்வதாக அகதிகள்கண்ணீர் மல்க கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த விவகாரத்தில் திமுக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து மெளனம்சாதித்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழ் சகோதரர்களும், சகோதரிகளும் இலங்கை ராணுவத்தின் கையில் சிக்கிஉயிரிழந்தும், மானம் இழந்தும் வரும் நிலையில், மாநில அரசும், மத்திய அரசும்மெளனம் சாதித்து வருவது மிகுந்த அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும்,வேதனையாகவும் உள்ளது.
உடனடியாக இரு அரசுகளும் தங்களது மெளனத்தைக் கலைந்து இலங்கைத்தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
69 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் வராது என்றுதமிழக அரசு அறிவித்திருப்பது சட்ட விரோதம் ஆகும்.
இது பாரபட்சமான நடவடிக்கை. இதன் மூலம் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில்தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்குதுரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமமம், விமான நிலைய ஆணையகத்திற்கு ஏற்கனவே நிலத்தைக் கொடுத்துவிட்டது.
ஆனால் அந்த நிலங்கள் எல்லாம் பணக்காரர்களுக்கு சொந்தமானது என்பதால், அந்தநிலத்தை விட்டு விட்டு நடுத்தர வர்க்கத்தினர், வறுமைக் கோட்டுக்குக் கீழ்உள்ளவர்கள் அதிகம் வசிக்கும், பொதுமக்கள் அதிகம் வசிக்கும், கல்வி நிறுவனங்கள்,கோவில்கள், வயல்கள் நிறைந்த பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கெளல் பஜார்போன்ற பகுதிகளில் நில ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்திருப்பதை பாஜக கடுமையாககண்டிக்கிறது.
இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்த மத்திய அரசு டிவு செய்திருப்பதைபாஜக கடுமையாக கண்டிக்கிறது.
இதேபோல விவசாயிகளின் நலனைப் புறக்கணிக்கும் விதமாக கோதுமை, அரிசிவிலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பதும், அவற்றை வெளி நாடுகளிலிருந்துஇறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதையும் பாஜக கண்டிக்கிறது.
இன்னொரு தீர்மானத்தில், தமிழகத்தில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் திமுக இடம் பெற்றுள்ள காங்கிரஸ்கூட்டணி அரசு, அரிசிக்கான மானியத்தைக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை திமுக அரசுஎப்படி நிறைவேற்றப் போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை திமுக அரசுபோக்கும் விதமாக விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications